சீந்தில்
சீந்தில் (Tinospora cordifolia) என்பது மரங்களில் தொற்றிப் படரும் ஒரு மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல்பகுதியில் தடித்த தோல் மூடிஇருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம் மூடியிருக்கும். இலைகள் இதய வடிவில் இருக்கும். இவை மரங்களின் மேல் ஏறிப் படரும். கொடியை அறுத்து விட்டாலும் உலர்ந்து போகாது. காற்றிலுள்ள நீரை உறிஞ்சி வாழும் திறனுடையது. அறுபட்ட இடத்திலிருந்து மெல்லிய கம்பிபோன்ற கொடிகளைக் கீழ்நோக்கி வளரவிட்டுப் பூமியில் வேரூன்றிக் கொண்டு பூமியிலிருந்து நீரை உறிஞ்சி வாழ ஆரம்பிக்கும். பெயர்கள்சீந்திலுக்கு அமிர்தவல்லி, சோமவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்கள் உண்டு. ‘வல்லி’ என்றால் ‘கொடி’ என்ற பொருளில், கொடி வகையான சீந்திலுக்கு அமிர்த‘வல்லி’ எனும் பெயரும், அமிர்தம் என்றால் ‘அழியாத தன்மையைக் கொடுக்கும்’ என்ற பொருளில் ‘அமிர்தை’ எனும் பெயர் இதற்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் பொற்சீந்தில் எனும் இனமும் உண்டு.[1] பயன்கள்சித்த மருத்துவத்தில்[2] சீந்தில் கொடியைக் கற்ப மருத்துவ குணம் (கற்ப மருந்து என்பது மனிதன் நீண்ட நாள் உயிர்வாழ உதவுவது என்பது பொருள்) கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. கிராமங்களில் குழந்தைகளுக்குச் சளி பிடிக்காமல் இருக்கக் கொடியின் சிறு துண்டை எண்ணெயில் பொரித்து ஆற வைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டுவது வழக்கம். பெரியவர்களுக்கும் சளிக்குச் சீந்தில் கொடியிலிருந்து மருந்து தயாரிக்கலாம். முற்றிய சீந்தில் கொடியிலிருந்து சீந்தில் சர்க்கரை என்னும் வெண்மையான பொடி தயாரிப்பர். அதற்குச் சீந்தில் சர்க்கரை என்று பெயர். சித்த மருந்து தயாரிப்பில் சீந்தில் சர்க்கரை பயன்படுகின்றது. பல ஆண்டுகளாக மருந்தாகப் பயன்படுத்தப்பட்டாலும் இச்செடியில் எந்த மருத்துவக் குணமும் உள்ளதாக நிரூபிக்கப்படவில்லை.[3] பக்க விளைவுகள்இச்செடியைக் கொதிக்கவைத்தோ அல்லது இச்செடியை மூலமாகக் கொண்ட மருந்தையோ பயன்படுத்தியவர்களுக்குக் கல்லீரல் அழற்சி ஏற்பட்டுள்ளது.[4][5] மேலும் ஏப்ரல் 2020 முதல் சூலை 2021 வரை இச்செடியை உட்கொண்ட 43 பேர்களுக்குக் கல்லீரல் அழற்சி ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சி வெளிவந்துள்ளது.[6][7] மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia