சீனப் பெரும் கால்வாய்
சீனப் பெரும் கால்வாய் (Grand Canal) அல்லது பெய்ஜிங்-கான்சு பெருங்கால்வாய் (Beijing-Hangzhou Grand Canal) உலகின் நீளமான கால்வாய் அல்லது செயற்கை ஆறு ஆகும். இது பெய்ஜிங்கில் தொடங்கி எபாய், சான்டாங், ஜிங்சு மற்றும் சிஜியங் மாகாணங்கள் வழியாக மஞ்சள் ஆற்றையும் யாங்சி ஆற்றையும் இணைத்துப் பின் சிஜியங் மாகாணத்தின் கான்சூ நகரை அடைகிறது. கால்வாயின் பழைய தடமானது சுய் அரசமரபின் (581-618) கிமு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது சீனாவின் குறிப்பிடத்தகுந்த சுற்றுலா இடங்களில் ஒன்றாகும் [1]. கால்வாயின் மொத்த நீளம் 1,776 கி.மீ. (1,104 மைல்). இக்கால்வாயின் உயரமான இடம் சான்டாங் மலை உச்சியில் 42மீ (138 அடி) ஆகும்.[2] இது கப்பல்கள் செல்லக்கூடிய கால்வாய் ஆகும். சாங் அரசமரபில் (960-1279) கிமு 10ம் நூற்றாண்டில் கதவுகள் பொருத்தப்பட்ட பின், உயரமான இடங்களை அடைய இருந்த தடை (சிரமம்) விலகியது.[2] இக்கால்வாய் வரலாற்றின் எல்லா காலங்களிலும் பல்வேறு அறிஞர்களால் பாராட்டப்பட்டிருக்கிறது [3][4]. மஞ்சள் ஆற்றில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம் இக்கால்வாயின் பாதுகாப்பிற்கும் செயல்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருந்தது. போர்காலங்களில் மஞ்சள் ஆற்றங்கரை உடைக்கப்பட்டு எதிரி படைகளின் முன்னேற்றம் தடைசெய்யப்பட்டது. இதனால் மக்களுக்குப் பொருளாதார முறையிலும் சிரமம் ஏற்பட்டது. சீரழிவாலும் அடிக்கடி பயன்பாட்டில் இல்லாமலும் இக்கால்வாய் போனாலும் சுய் ஆட்சிமரபு காலத்தில் இருந்தே சீனாவின் பொருளாதாரம் வளர்வதற்கு முதன்மையானதாக இக்கால்வாய் இருந்தது. ![]() வரலாறுதொடக்ககால வரலாறுமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia