சீனாவில் இனவாதம்இன்றைய சீனருக்கும் சீன சிறுபான்மை இனத்தவருக்கும், ஐரோப்பியருக்கும், கறுப்பின மக்களுக்கும், இந்தியருக்குமான உறவாடலில் சீன மக்கள் காட்டும் இனப் பாகுபாட்டை சீனாவில் இனப் பாகுபாடு என்ற கட்டுரை விபரிக்கும். இனப் பாகுபாடு என்ற சொல் Racisim என்ற சொல்லுக்கும் இணையாகவே இங்கு எடுத்தாளப்படுகின்றது. சீனாவில் மக்கள் வகைப்பாடும் பின்புலமும்சீனா 92% ஹான் சீனரை பெரும்பானமையாகக் கொண்ட சமூகம் ஆகும். சீனா அதிகாரபூர்வமாக 55 இனச் சிறுபான்மைக் குழுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது எனினும், சிறுபான்மைக் குழுக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டே வருகின்றன. சீனாவில் சீன மொழி மட்டுமே அரசல் அலுவல் மொழி. மற்ற மொழிகள் பேசப்படுவதற்கு சுதந்திரம் இருக்கும் என்றாலும். அவை பேணப்படுவதற்கு வாய்ப்புக்கள் குறைவே.[1] சீனாவில் 1949 சீனப் பொதுவுடமைக் கட்சி ஆட்சிக்கு வந்த போது சமய வழிபாடு அடக்குமுறைக்கு உட்பட்டது.[2] தொடர்ந்தும் வெவ்வேறு சமய பின்பற்றுதல்கள் சீன ஒற்றுமைக்கு அல்லது பொதுவுடமைக் கட்சி கட்டுப்பாட்டுக்கு சவால் விடத்தக்க ஒரு கூறாகவே பாக்கபடுகிறது. வரலாறுசீனாவின் இனப் பாகுபாட்டு நிலவரத்தை அறிய அதன் வரலாற்றை கருத்தில் கொள்ள வேண்டும். பிற மக்கள் தொடர்புகள்சீனா பெரும்பாலும் homogeneous நாடாகவே அதன் நீண்ட வரலாற்றில் இருந்து வந்திக்கின்றது. மொங்கொல்ஸ், மஞ்சு, உருசியர், முஸ்லீம்கள், யப்பானியர், மேற்குநாட்டினர் சீனாவை ஆக்கிரமித்து அரசியல் பொருளாதார ஆதிக்கம் அவ்வப்பொழுது செலுத்தி வந்திருந்தாலும் அது நீண்ட காலங்களுக்கு நிலைத்து நிற்கவில்லை. மொங்கொல்ஸ், மஞ்சு சீனப் பண்பாட்டால் உள்வாங்கப்பட்டனர். யப்பானியர் மீதும் சீனப் பண்பாட்டின் செல்வாக்கு பெரிது. வந்த முஸ்லீம்கள் இந்தியாவில் போலன்றி பெரிதான தாக்கத்தை எதையும் ஏற்படுத்தவில்லை. உருசியர்களுடான தொடர்பும் மட்டுப்படுத்தப்பட்டதே. மேற்குநாட்டிரின் ஆதிக்கம் சீனாவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. முதன்முறையாக சீனாவுகுக்கு இணையான பலம் பொருந்திய சக்தியாக மேற்கே பார்க்கப்பட்டது. இந்தியாவில் இருந்து வந்த பெளத்த சமய சிந்தனை மரபும் குறிப்பிடத்தக்கது. மற்ற நாடுகளுடன் ஒப்பீடுஇந்தியா 1947 ஆம் ஆண்டு இங்கிலாந்து காலனித்துவ பேரரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நாடு. மாறாக சீனா அதன் நீண்ட வரலாற்றில் பல முறை ஒரே அரசியல் பிரிவாக, பேரரசாக இருந்திருக்கிறது. இந்தியா போல் அல்லாமல் சீனாவில் என்றும் பல்லின, பன்மொழி, பல் சமய மக்கள் கிட்ட தட்ட ஒரேயளவு அரசியல் பொருளாதார வலிமை உடையனவாக என்றும் இருந்ததில்லை. இந்தியாவில் இனப் பாகுபாடு என்றதிலும் பார்க்க சாதிப் பாகுபாடே பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. ஐக்கிய அமெரிக்கா தொடக்கதில் இருந்து வந்தேறிய குடிகளின் நாடு. அதற்கு கறைபடிந்த இனப் பாகுபாடு வரலாறு உண்டு. முதலில் அமெரிக்காவுக்கு வந்த ஐரோப்பியர் பெரும்பான்மை முதற்குடிமக்களை சாவுக்கு இட்டு சென்றனர். பின்னர் அமெரிக்கா ஆபிரிக்க அடிமைகள் வர்த்தகத்தில் ஈடுபட்டது. நீண்ட எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பின்னர் 1950 களிலேயே கறுப்பின மக்களுக்கு விடுதலை கிடைத்தது. அதன் பின்னர் அமெரிக்க பல்லின மக்கள் உரிமையுடன் வாழக்கூடிய ஒரு நாடாகவே பெரிதும் இருந்து வருகிறது. ஐரோப்பா காலனித்துவ அடக்குமுறை வரலாற்றைத் தன்னகத்தே கொண்டது. இன்றும் உலகின் பல பாகங்கள் ஐரோப்பாவின் நேரடி நிர்வாகத்திலேயே இருக்கின்றன. விடுதலை அடைந்த நாடுகளும் ஐரோப்பிய மொழி, அரசியல், சட்ட, பொருளாதார, சமய, பண்பாட்டு ஏற்பாடுகளை ஏற்றவையாகவே இருக்கின்றன. இன்றைய ஐரோப்பாவில் ஒப்பீட்டளவில் பல்லின மக்கள் பெரும் நகரங்களில் சுமூகமாக வாழ்கின்றனர். சீனர் சிறுபான்மையினர் இனப் பாகுபாடுசீனா அதிகாரபூர்வமாக 55 இனச் சிறுபான்மைக் குழுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது எனினும், சிறுபான்மைக் குழுக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டே வருகின்றன. எடுத்துக் காட்டாக திபெத்திய மக்களின் திபெத் நிலப்பகுதியை 1950 களில் சீனா வன்முறையாக ஆக்கிரமித்து, அவர்களின் அரசியல் சமய தலைமை வெளியே செல்ல வேண்டி வந்தது. அதன் பின்னர் அவர்கள் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டு அவர்களின் தனித்துவ மொழி, சமய, பண்பாட்டு முறைகள் சீரளிவுக்கு உள்ளாகின (ஆதாரம் தேவை). சீனர் ஐரோப்பியர் இனப் பாகுபாடுஇன்று, சீனரை விட பொருளாதார, தொழில்நுட்ப, போரியல் நோக்கில் வளர்ச்சி பெற்ற ஐரோப்பியரை சீனர்கள் மரியாதையுடன் பார்க்கின்றனர். அவர்கள் மீது காலனித்துவ வெறுப்பு இருந்தாலும், அவர்களின் தொழில்நுட்ப, பொருளாதார, போரியல் முறைகளை பின்பற்ற இன்றைய சீன அரசு முயலுகிறது. அதனால் ஆங்கிலம் கற்பிக்க பல வெள்ளை இன ஐரோப்பியரை சீனா வரவழைக்கின்றது. சீனர் கறுப்பினத்தவர் இனப் பாகுபாடுசீனப் பொதுவுடமைக் கட்சி ஆட்சிக்கு வந்த போது அது தன்னை மூன்றாம் உலக நாடுகளின் தலைமையாகவே பாத்தது. குறிப்பாக ஆபிரிக்க இனத்தவரையும் மேற்கு நாடுகளின் முதலாளித்துவ சக்திக்கு எதிராக அணிதிரட்டுவதில் அக்கறை காட்டியது. எனினும், வெளி நாட்டவருக்கு, குறிப்பாக ஆபிரிக்கர்களுக்கு சீனப் பொதுமக்கள் வரவேற்பு காட்டவில்லை. வெளி நாட்டு கறுப்பின மாணவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வன்முறைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளார்கள்.[3][4] சீன இந்தியர் இனப் பாகுபாடுசீனருக்கும் இந்தியருக்குமான இன பாகுபாடு நிலைமையை அறிவது கடினமாகவே இருக்கிறது. காரணம் இரண்டு நாடுகளுக்குமான நேரடித் தொடர்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே. சீனாவுக்கும் இந்தியாவுக்குமான அரசியல் தொடர்பு சிறப்பாக அமையவில்லை. குறிப்பாக சீனா இந்தியப் போர், சீன பாகிஸ்தான் நல்லுறவு. இருப்பினும் அரசியல் நிலைமை வைத்து இனப் பாகுபாட்டை பற்றி மதிப்பீடு செய்வது கடினம். எனினும் சீனர்களின் கறுப்பின மக்களுக்கு காட்டும் இனப் பாகுபாட்டை ஒத்தே இந்தியகளுக்கும் காட்டவர் எனலாம்.[5] இவற்றையும் பாக்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia