சீன ஓங்கல்
இந்தோ பசிபிக் கூனல் ஓங்கில் அல்லது சீன ஓங்கல் ( Indo-Pacific humpback dolphin ) என்பது கிழக்கு இந்திய மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல்களின் கடலோர நீரில் வசிக்கும் ஒரு வகை கூனல் ஓங்கல் ஆகும்.[2] சீனா, மக்காவ், ஆங்காங், தைவான், சிங்கப்பூர் ஆகிய முக்கிய நிலப்பகுதிகளில் இந்த இனம் பெரும்பாலும் சீன வெள்ளை ஓங்கல் என்று அழைக்கப்படுகிறது. சில உயிரியலாளர்கள் இந்தோ-பசிபிக் ஓங்கல் இந்தியப் பெருங்கடல் கூனல் ஓங்கலின் ( எஸ். பிளம்பியா ) கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வரை உள்ள ஒரு துணையினமாக கருதுகின்றனர். இருப்பினும், மரபணு சோதனை ஆய்வுகள் இரண்டும் தனித்தனி இனங்கள் என்பதை உறுதிபடுத்தியுள்ளன.[1] புதிய இனங்களாக, ஆத்திதிரேலிய கூன்முதுகு ஓங்கல் (S. sahulensis), எஸ். சினென்சிஸிலிருந்து பிரிக்கப்பட்டு 2014 இல் ஒரு தனி இனமாக அங்கீகரிக்கப்பட்டது.[3] ஆயினும்கூட, இந்தியப் பெருங்கடல் வகை மற்றும் இந்தோ-பசிபிக் வகை கூனல் ஓங்கல்களின் வேறுபாட்டில் இன்னும் தீர்க்கப்படாத பல சிக்கல்கள் உள்ளன. விளக்கம்![]() வயது வந்த சீன ஓங்கல் சாம்பல், வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும். மேலும் இது சிலருக்கு அல்பினோ ஓங்கில் போல் தோன்றலாம். சீன,[4] தாய்லாந்து [5] கடலோரப் பகுதிகளில் காணப்படும் இந்த ஓங்கில் இனங்கள் இளஞ்சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றன. இவற்றின் இளஞ்சிவப்பு நிறத்திற்கு இதன் உடலில் உள்ள நிறமி காரணம் அல்ல. ஆனால் இதன் உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்ள ஏதுவாக அதிக வளர்ச்சியடைந்த குருதி நாளங்களால் இந்த நிறத்தில் தோன்றுகிறது. இவற்றின் உடல் நீளமானது வளர்ந்த மீன்களுக்கு 2 முதல் 3.5 மீ (6 அடி 7 முதல் 11 அடி 6 அங்குலம்) இளம் மீன்களுக்கு 1 மீ (3 அடி 3 அங்குலம்) வரை இருக்கும். வயது வந்த இந்த மீன்களின் எடை 150 முதல் 230 கிலோ (330 முதல் 510 பவுண்ட்) இருக்கும். சீன ஓங்கில்கள் 40 ஆண்டுகள் வரை வாழ்கின்றன,[6] இவற்றின் வயதானது பற்களை ஆய்வதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த ஓங்கில்கள் பிறக்கும்போது அடர் சாம்பல் அல்லது கறுப்பு நிறத்தில் சுமார் 1 மீட்டர் (3.3 அடி) நீளம் இருக்கும். வயதாகும்போது இவற்றின் நிறம் பளபளப்பான சாம்பல் நிறத்தில் இருக்கும்.[7] நடத்தைசீன ஒங்கில்கள் சிறிய குழுக்களாக வாழ்கின்றன. போதுவாக ஒரு குழுவில் பத்துக்கும் குறைவான ஓங்கல்கள் இருக்கும். இவை எதிரொலியை பயன்படுத்தி குழுவாக சேர்ந்து வேட்டையாடுகிறன.[8] வயது வந்த டால்பின்கள் இரண்டு முதல் எட்டு நிமிடங்கள் வரை மூச்சடக்கி இருக்கும். பின்னர் மீண்டும் ஆழமாக குதிப்பபதற்கு முன் 20 முதல் 30 வினாடிகள் வரை மூச்செடுக்க நீரின் மேற்பரப்பிற்கு வருகின்றன. குட்டி ஓங்கில்களின், நுரையீரல் குறைந்த திறன் கொண்டுள்ளதால், பெரிய மீன்களை விட அடிக்கடி மேற்பரப்புக்கு வந்து மூச்செடுக்கக்கூடியன. குட்டிகள் ஒன்று முதல் மூன்று நிமிடங்கள் வரை நீருக்கடியில் மூச்சடக்கி இருக்கும். வயது வந்த டால்பின்கள் அரிதாக நான்கு நிமிடங்களுக்கு மேல் தண்ணீருக்கு அடியில் இருக்கும். இவை சில சமயங்களில் தண்ணீரின் மேற்பரப்பில் முழுமையாகத் தாவுகின்றன. இவை தண்ணீரிலிருந்து செங்குத்தாக எழும்பலாம், அப்போது அவற்றின் உடல் முதுகில் பாதி வெளிப்படும். இவற்றின் கண்களால் காற்று மற்றும் நீர் என இரண்டிலும் தெளிவாகப் பார்க்க முடியும். இனப்பெருக்கம்பெண் ஓங்கில்கள் சுமார் பத்து வயதில் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. அதே நேரம் ஆண் ஓங்கில்கள் 13 வயதில் முதிர்ச்சியடைகிறன. இவை வழக்கமாக கோடையின் இறுதியில் இருந்து இலையுதிர் காலம் வரை இணை சேர்கின்றன. பதினொரு மாத கர்ப்ப காலத்திற்குப் பிறகு குட்டிகள் பிறக்கின்றன. குட்டிகள் 3-4 வயதை எட்டி, தனக்கான உணவைத் தேடும் வரை தன் தாயுடனே இருக்கும்.[6] அச்சுறுத்தல்கள்சீன ஓங்கிலகளானது வாழ்விட இழப்பு, நீர் மாசுபாடு, கடலோர வளர்ச்சிப் பணிகள், அதிகமாக மீன்பிடித்தல், இவை வாழும் எல்லைக்குள் கடல் போக்குவரத்து அதிகரிப்பு ஆகியவற்றால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.[9][10] 2015 ஆம் ஆண்டில் சீன ஓங்கில் ஐயூசிஎன் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் செம் பட்டியலில் "அழிவாய்ப்பு இனம்" என்று வகைப்படுத்தப்பட்டது.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia