சீன சோதிடம்![]() சீன சோதிடம் (Chinese Astrology) என்பது 12 விலங்குகளை அடிப்படையாக கொண்டு, சீன வருடங்கள் அல்லது பிறப்புகளின்படி கணிக்கப்படும் ஒரு சோதிட முறை ஆகும். இதில் ஒவ்வொரு வருடமும் ஒரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வாறு 12 வருடங்கள், 5 மூலகங்கள் மற்றும் யின்-யான் எனப்படும் சீனத் தத்துவம் ஆகியவை சேர்த்து 60 வருடங்கள் கொண்ட ஒரு சக்கர வடிவில் சீன சோதிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனின் பிறந்த வருடம், மாதம் மற்றும் நேரம் ஆகியவற்றைக் கொண்டு அவர்களின் எதிர்காலம் கணிக்கப்படுகின்றது. புத்தர் தனது இறுதி நாட்களில் இந்த சோதிட முறையை உருவாக்கியதாக சீன மக்கள் நம்புகின்றனர். கி.மு 2600 -ல் பேரரசர் குவாங் தீ காலத்தில் விலங்குச் சக்கரம் அறிமுகப்படுத்தப்பட்டு எளிதாக்கப்பட்ட பின்பு, கான் பேரரசின் காலத்தில் இது மிகுந்த வளச்சியுற்றது. சீனாவில் இது சாதாரன சோதிடக் கலையாக மட்டும் இல்லாமல், சீனத் தத்துவங்களின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. இந்த சோதிடக் கலையின் அடிப்படையிலேயே சீனப் புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் ஒரு மிருகத்தின் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றன. சீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவமரமாக உருவகப்படுத்தப்பட்டது. பின்பு இதை கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்கு பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது. சீன ஆண்டுகள்புத்தர் முக்தி அடைந்து, இந்த உலகத்தை விட்டுச் செல்லும் போது, உலகிலுள்ள அனைத்து விலங்குகளிடமும் விடை பெற்றுச் செல்ல வேண்டி, சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார். அவர் அழைப்பை ஏற்று வந்தவை பன்னிரண்டே. எனவே அவ்வாறு வந்த விலங்குகளுக்கு மதிப்பு தரும் வகையில், அவை வந்த வரிசையின் அடிப்படையில், ஒவ்வொரு விலங்கின் பெயரையும் பன்னிரண்டு சீன ஆண்டுகளுக்கும் வைத்தார். மேலே கூறப்பட்ட கதையின் அடிப்படையிலேயே சீன ஆண்டுகள் விலங்குகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அவை, 1. எலி சீன ஆண்டுகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன.எனவே இவை நடைமுறையில் உள்ள ஆங்கில நாள்காட்டியுடன் சரியாக ஒத்துப் போவதில்லை. சனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் இருந்து புது வருடம் கணக்கிடப்படுகின்றன. சீன ஆண்டு அட்டவனை
மூலகம்சீன சோதிடத்தில் மொத்தம் ஐந்து மூலகங்கள் உள்ளன. மரம், நெருப்பு, உலோகம், நீர் மற்றும் பூமி ஆகிய இவை அனைத்தும் தனியே அன்றி யின்-யான் சக்திகளுடன் சேர்த்தே குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு மூலகமும் ஒவ்வொரு குறிகளின் தன்மைகளை ஆளும் சக்தி கொண்டவையாக கருதப்படுகின்றன. மூலக அட்டவனை
யின்-யான்யின் மற்றும் யான் எனப்படுபவை இந்த உலகத்தை ஆளும் இரு வேறு நேர் எதிர் சக்திகள் என சீனத் தத்துவம் கூறுகின்றது. இரவு-பகல், ஆண்மை-பெண்மை என்று இவ்வாறான நேர் எதிர் யின்-யான் சக்திகளே போட்டி போட்டுக் கொண்டு இந்த உலகத்தை இயக்குவதாக சீன சோதிடம் கூறுகின்றது. இவ்விரு சக்திகளின் ஆளுமை ஒரு மனிதனின் நடவடிக்கைகளை மாற்ற வல்லது என சீன சோதிடம் குறிப்பிடுகின்றது. யின் கூறுகள்எதிர்மறை சக்தி, கருப்பு, அடிமைத்தனம், நீர், உலோகம் மற்றும் பூமி ஆகியவை யின் கூறுகள் ஆகும். இவை இரவு, பள்ளத்தாக்கு, நதிகள் மற்றும் ஓடைகள் ஆகியவற்றைச் சார்ந்தது. யான் கூறுகள்நேர்மறை சக்தி, ஆளுமை, நெருப்பு, மரம் மற்றும் காற்று ஆகியவை யான் கூறுகள் ஆகும். இவை பகல், மலைகல் மற்றும் குன்றுகள் ஆகியவற்றைச் சார்ந்தது யின்-யான் அட்டவனையின் யான் ஆகியவை மரம், நெருப்பு, பூமி, உலோகம், நீர் ஆகிய ஐந்து மூலகங்களுடன் சேர்த்து கணிக்கப்படுகின்றது. இவை பத்து வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வருகின்றன. எனவே வருட முடிவு எண்ணைக் கொண்டே இதை சுலபமாக கணிக்கலாம். மாதங்கள் போல அல்லாமல் சீன வருடங்கள் ஆங்கில வருடங்களை ஒத்து வருவதால் இதைக் கணிக்க ஆங்கில ஆண்டு முறையையே பயன்படுத்தலாம்.
உள்குறிசீன சோதிடத்தில் அதன் வருடங்கள் மொத்தம் பன்னிரெண்டாக பிரிக்கப்பட்டு, அவைகளுக்கு பன்னிரெண்டு விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது போலவே, அதன் மாதங்களும் பன்னிரெண்டாக பிரிக்கப்பட்டு அவற்றிர்கும் அதே விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருக்கும் நாள்களும் இரண்டு மணிகளுக்கு ஒரு காலம் என்ற விகிதத்தில் மேலும் பன்னிரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவையே சீன சோதிடத்தின் உள்குறிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த உள்குறிகள் ஒரு மனிதனின் குணாதிசயங்களை நுணுக்கமாக அறியப் பயன்படுத்தப்படுகின்றன. மாதக் குறி அட்டவனை
நேரக் குறி அட்டவனை
கணிப்புசீன சோதிடம் ஒருவர் பிறந்த வருடத்தைக் கொண்டு அவரின் பொதுவான குணங்கள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கூறுகின்றது. அதோடு அவரின் உள்குறிகளைக் கொண்டு நுணுக்கமான அளவிலும் அறிய முடிகின்றது. இந்த உள்குறிகள் பின்வருமாறு கணிக்கப்படுகின்றன. 1980 ஆம் வருடம், மார்ச் மாதம் 26 ஆம் திகதி, காலை 7.45 மணிக்கு பிறந்த ஒருவரின் உள்குறிகள்,
இதையும் பார்க்கவும்உசாத்துணைவெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia