சீமராஜா (2018 திரைப்படம்)நடிப்பு
படப்பணிகள்வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப்பிறகு, இப்படத்தினை பொன்ராம் இயக்கவுள்ளதாவும், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், ஆகத்து 2016இல் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர். டி. இராஜா அறிவித்தார்.[1][2] இப்படம் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், 2017ஆம் ஆண்டின் தீபாவளிக்கு முன்னர் இப்படம் வெளியிடப்படும் என்றும் ஆர். டி. இராஜா தெரிவித்தார். முந்தையப் படங்களைப்போலவே இப்படத்திற்கும் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவிலும், டி. இமானின் இசையிலும், விவேக் அர்சனின் படத்தொகுப்பிலும் இப்படம் படமாக்கப்பட்டது.[3][4] இப்படத்திற்காக சமந்தா சிலம்பம் கற்றார்.[5] சிவகார்த்திகேயனின் மற்ற இரு திரைப்படங்களை விரைந்து முடிப்பதற்காக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.[6] இப்படத்தின் தொடக்க விழா 16 சூன் 2017 இல் சிம்ரன், நெப்போலியன் , லால் ஆகியோருடன் தொடங்கியது.[7][8] இசைஇத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். சான்றுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia