சீவலமாறன் கதைசீவலமாறன் கதை என்னும் நூல் [1] 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிதம்பரநாத கவி என்பவரால் இயற்றப்பட்ட இரண்டு நூல்களில் ஒன்று. சங்கரவிலாசம் என்பது இவரின் மற்றொரு நூல். சீவலமாறன் என்னும் பெயர் அரசனாகவும், புலவராகவும் 14 ஆம் நூற்றாண்டில் விளங்கிய அதிவீரராம பாண்டியனைக் குறிக்கும். இந்த நூலின் ஓலைச்சுவடி பிற்காலத்து ஒருவரால் படி-எழுதப்பட்ட காலம் 1743 [2] நூலின் அமைப்பு
நூல் சொல்லும் கதைஅரசன் பராந்தக மாறன் நெல்லையில் இருந்துகொண்டு அரசாண்டுவந்தான். இவனது மனைவி பெயர் பாடகவல்லி. குழந்தைப் பேற்றுக்காக இருவரும் தவம் செய்தனர். திருமால் வரம் தந்தார். கருத்தரித்ததும் தந்தை இறப்பான் என்பதும், குழந்தை பிறந்ததும் தாய் இறப்பாள் என்பதும் வரம். அவ்வாறே நிகழ்கிறது. குழந்தை பெயர் சீவலமாறன். அமைச்சர் குழந்தையை வளர்க்கிறார். முடி சூட்டுகிறார். அரசன் சீவலமாறன் தன் பெற்றோருக்குக் கங்கைக் கரையில் கடன் செய்யப் புறப்படுகிறான்.
உடனே நாடு திரும்பாவிட்டால் ஆளாக்கிய அமைச்சர் உயிர் துறக்கப்போவதாக ஓலை வருகிறது. சீவலமாறன் நாடு திரும்புகிறான். வழியில் கேதாரம், சோமநாதம், காளத்தி, தில்லை முதலான ஊர்களை வழிபட்டுக்கொண்டே வந்தான்.
இறுதியில் இந்திர விமானத்தில் சுவர்க்கம் செல்கிறான். பாடல்இந்த நூலிலுள்ள பாடல் ஒன்று எடுத்துக்காட்டுக்காகத் தரப்படுகிறது. அரி அயன் காணா வண்ணம் அழல் உரு ஆனாய் போற்றி கருவிநூல்
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia