சுங்கான்
சுங்கான் (Plotosus lineatus) என்பது பிளோடோசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஈல்டெயில் கேட்ஃபிஷ் இனத்தைச் சேர்ந்த ஒரு கெழுது மீன் ஆகும். விளக்கம்சுங்கான் மீனானது அதிகபட்சமாக 32 செமீ (13 அங்குளம்) நீளம் வரை எட்டும்.[1] இதன் கரும் பழுப்பு நிற உடலில் அணிலுக்கு உள்ளது போன்று கிரீம் அல்லது வெள்ளை நிறத்தில் நீளமான பட்டைகள் இருக்கும். இதன் வயிறு வெண்மையாக இருக்கும். இந்த இனத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் இதன் துடுப்புகளில் உள்ளது. இதன் இரண்டாவது முதுகு துடுப்பு, வால் மற்றும் குத துடுப்பு போன்றவை விலாங்கு மீன்களைப் போலவே ஒன்றாக இணைந்துள்ளன. உடலின் மற்ற பகுதிகளில் நன்னீர் கெளுத்தி மீன்கள் போலவே உள்ளது. வாயானது நான்கு ஜோடி உணர் இழைகளால் சூழப்பட்டுள்ளது, நான்கு உணர் இழைகள் மேல் தாடையிலும், நான்கு உணர் இழைகள் கீழ் தாடையிலும் உள்ளன. முதல் முதுகு துடுப்பு மற்றும் மார்புத் துடுப்புகள் ஒவ்வொன்றும் அதிக நஞ்சுள்ள முட்களைக் கொண்டுள்ளன. அவை மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம்.[1] சுங்கான்களில் இளம் பருவ மீன்கள் சுமார் 100 மீன்களைக் கொண்ட பந்து வடிவ கூட்டமாக திரண்டு சுற்றுகின்றன. அதே சமயம் பெரிய மீன்கள் தனித்தோ அல்லது சுமார் 20 மீன்கள் கொண்ட சிறிய குழுக்களாகவோ இருக்கின்றன. பகலில் பாறை விளிம்புகளின் அடியில் ஒளிந்து கொள்கின்றன.[1] வளர்ந்த சுங்கான்கள் ஓடுடைய கணுக்காலிகள், மொல்லுடலிகள், புழுக்கள், சில சமயங்களில் மீன்களைத் தேடி மணலை இடைவிடாமல் கிளறக்கூடியன.[1] இவை முட்டையிடும் மீன்களாகும்.
பரவலும், வாழ்விடமும்இந்த இன மீன்கள் இந்தியப் பெருங்கடலில், மேற்கு பசிபிக் பெருங்கடலில் காணப்படுகின்றன. சில சமயங்களில் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கரில் நன்னீரிலும் நுழைகின்றன. இந்த இனம் தற்போது மத்தியதரைக் கடலிலும் காணப்படுகிறது. சூயஸ் கால்வாய் வழியாக இவை அங்கு குடியேறியுள்ளன.[2] இவை பவளப்பாறைகளில் காணப்படுகின்றன; மேலும் கடலோரங்கள், திறந்த கடற்பகுதிகளிலும் காணப்படுகின்றன.[1] ஐரோப்பியத் தடைஇந்த மீனினமானது ஐரோப்பாவில், 2019 ஆம் ஆண்டு முதல் அந்நிய ஆக்கிரமிப்பு இனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.[3] இதனால் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இந்த இனத்தை இறக்குமதி செய்யவோ, இனப்பெருக்கம் செய்யவோ, கொண்டு செல்லவோ, வணிகம் செய்யவோ அல்லது வேண்டுமென்றே இயற்கை வாழிடங்களில் விடவோ தடை செய்யப்பட்டுள்ளது.[4] குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia