சுண்ணாம்புத் தொழில் (தமிழர் தொழிற்கலை)![]() தமிழர் தாயகப் பகுதிகளில் சுண்ணாம்பு மிகுந்து கிடைப்பதால் நீண்டகாலமாக தமிழர்கள் சுண்ணாம்புத் தொழிலில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சுண்ணாம்பு உறுதியான கட்டிடங்களைக் கட்ட (சுண்ணாம்புச் சாந்து), வெள்ளைப் பூச்சடிக்க, மண்ணில் அமிலத்தன்மையைக் குறைக்க, உரமாக, கல்சியம் ஐதரொசைட் தயாரிக்க, வெளிற்றும் தூள் தயாரிக்க எனப் பலப் பயன்பாடுகளைக் கொண்டது.[1] யாழ்ப்பாணப் பகுதியில் சுண்ணாம்பைப் பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டப்பட்டுகின்றன. சுண்ணம்புச் சூளை அமைப்புகளும் நடைபெறும் தாக்கங்களும்கல்சியம் காபனேற்று மூலங்களான சிப்பி, சுண்ணம்புக் கல் முதலானவற்றிலிருந்து சுட்டசுண்ணாம்பை பெறுவதற்கு சூளைகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு நடைபெறும் வேதியியல் தாக்கம்
இந்த தாக்கம் சிறப்பாக நடைபெறும் வெப்பநிலை 900 °C (1650 °F; இல் பெறப்படும் CO2 இன் பகுதி அமுக்கம் 1 வளிமாண்டலமாகவும் வெப்பநிலை 1000 °C (1800 °F; இல் பெறப்படும் CO2 இன் பகுதி அமுக்கம் 3.8 வளிமண்டலமாகவும்[2]) இருக்கும். இதுவிரைவான சுண்ணம்பை பெறும் வெப்பநிலைகளாகும்[3] இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் பாரம்பரிய சுண்ணாம்புச் சூளைகள் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கு நாடுகளில் புதிய சூளை அமைப்புகள் காணப்படுகின்றன. ![]() மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia