சுந்தர்கட்
![]() சுந்தர்கர் அல்லது சுந்தர்கட் (Sundargarh), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் வடமேற்கில் அமைந்த சுந்தர்கட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இதனருகே அமைந்த பெரிய நகரம் ஜார்சுகுடா ஆகும். சுந்தர்கட் நகரம் கடல்மட்டத்திலிருந்து 243 மீட்டர் (801 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.இது மாநிலத் தலைநகரானபுவனேசுவரத்திற்கு வடமேற்கே 353 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது சுந்தர்கர் நகரம் கங்காபூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கியது. போக்குவரத்துமாநில நெடுஞ்சாலை எண் 10 சம்பல்பூர் மற்றும் ரூர்கேலா நகரங்களுடன் இணைக்கிறது. இந்நகரத்திற்கு 32.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜார்சுகுடா நகரத்தில் தொடருந்து நிலையம் மற்றும் வானூர்தி நிலையம் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19 வார்டுகளும், 10,127 குடியிருப்புகளும் கொண்ட சுந்தர்கர் நகரத்தின் மக்கள் தொகை 45,036 ஆகும். அதில் 22,754 ஆண்கள் மற்றும் 22,282 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.68 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.88 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 22.15 % மற்றும் 9.49 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 83.25%, இசுலாமியர் 7.94%, கிறித்தவர்கள் 7.91%, சீக்கியர்கள் 0.20%% மற்றும் பிற சமயத்தினர் 0..69% வீதம் உள்ளனர்.[1] தட்ப வெப்பம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia