சுனிதா துக்கல்{{Infobox officeholder | name =
சுனிதா துக்கல் (Sunita Duggal)(பிறப்பு: ஏப்ரல் 29, 1968) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சிர்சா நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அரியானாவின் ஒரே பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1] துக்கல் வருமான வரித்துறையில் 22 ஆண்டுகள் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். இவர் 2014-ல் வருமான வரி உதவி ஆணையராக இந்திய வருவாய் சேவையிலிருந்து விருப்ப பணி ஓய்வு பெற்றார். இவரது கணவர் அரியானா தொகுப்பு இந்தியக் காவல் சேவை அதிகாரி ஆவார். துக்கல் 2014ஆம் ஆண்டு அரியானா சட்டமன்ற தேர்தலில் ராட்டியா தொகுதியிலிருந்து போட்டியிட்டார். ஆனால் வெறும் 453 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவரது நல்ல கல்விப் பின்னணி மற்றும் அதிகாரத்துவ அனுபவத்தின் காரணமாக இவர் அரியானா அரசாங்கத்தில் அரியான பட்டியல் இனத்தவர் நிதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia