சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா லின் "சுனி" வில்லியம்சு (Sunita Lyn "Suni" Williams, பிறப்பு: செப்டம்பர் 19, 1965) அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையும், ஓய்வுபெற்ற ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அதிகாரியும் ஆவார். இவர் விண்வெளியில் அதிக நேரம் பயணம் செய்த பெண் சாதனையாளர் ஆவார் (ஏழு முறை 50 மணி நேரம், 40 நிமிடங்கள்)[1][2][3][4][5] இவர் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு 14ஆம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார். பின்னர் 15ஆம் விண்வெளிப் பயணத்தில் இணைந்தார். 2012 ஆம் ஆண்டில், 32ஆம் விண்வெளிப் பயணத்தில் விமான பொறியாளராகவும், பின்னர் 33ஆம் விண்வெளிப் பயணத்தில் தலைவராகவும் பணியாற்றினார். 2024 ஆம் ஆண்டில், போயிங் இசுடார்லைனர் மூலம் அனைத்துலக விண்வெளி நிலையம் சென்ற இவரது முதல் பணிக்குழுவில் சென்றார். சுனிதாவும் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் பல்வேறு அறிவியல் சோதனைகள், பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.[6] இவர் பூமிக்குத் திரும்பும் காலம் நெருங்கினாலும், தொழில்நுட்பக் காரணங்களால் திரும்பி வருவது தாமதமானது, நிறைவாக மார்ச்சு 18, 2025 அன்று பூமிக்குத் திரும்பினார்.[7][8] இளமை வாழ்க்கைசுனிதா இந்தியத் தந்தைக்கும், சுலொவீனியத் தாய்க்கும் ஒகையோவின் யூக்லிட்டில் பிறந்தார். ஆனால் மாசச்சூசெட்சிலுள்ள நீட்காமை தனது சொந்த ஊராகக் கருதுகிறார்.[9] இவரது தந்தை தீபக் பாண்டியா, குசராத்தின் மெக்சனா மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஆவார். அதே நேரத்தில் இவரது தாயார் உர்சுலின் போனி பாண்டியா சுலோவீனிய-அமெரிக்கர் ஆவார். சுனிதா தனது இந்திய மற்றும் சுலொவீனிய பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக சுலோவீனிய நாட்டின் தேசியக் கொடி,[10] பகவத் கீதை, பிள்ளையார் படம் மற்றும் சில சமோசாக்கள் இருந்தன. அமெரிக்காவில் இவரது புனைப்பெயர் சுனி என்றும் சுலெவீனியாவில் சோன்கா எனவும் அறியப்படுகிறது.[11] சுனிதா 1983இல் நீட்காம் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1983இல் தேர்ச்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து 1987இல் அமெரிக்க கப்பற்படை அகாடமியிலிருந்து அறிவியலில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். 1995 ஆம் ஆண்டில் புளோரிடா தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுகலை அறிவியல் பட்டத்தையும் பெற்றார்.[12] இராணுவ சேவை1987 மே மாதம், ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் இளநிலை அதிகாரியாக பணி புரியும் வாய்ப்பை சுனிதா பெற்றார். அடுத்ததாக கடற்படை விமானியாகப் பயிற்சி பெற்ற இவர் சூலை 1989இல் கப்பற்படை விமானியாக நியமிக்கப்பட்ட இவர், கப்பற்படையின் சோதனை பைலட் பள்ளியில் 1993இல் பட்டம் பெற்றார். ஒரு விமானியாக வளைகுடாப் போரில் பங்கேற்றார். 1992 செப்டம்பரில், புளோரிடாவைத் தாக்கிய ஆண்ட்ரூ சூறாவளி நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.[12] 1998 ஆம் ஆண்டு சூன் மாதம் நாசா விண்வெளி திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12] இவர் 30க்கும் மேற்பட்ட விமான வகைகளில் 3,000 க்கும் மேற்பட்ட விமான நேரங்களில் பறந்துள்ளார்.[13] பின்னர், சுனிதா வில்லியம்சு, 2017இல் கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றார்.[14] நாசாவில் தொழில் வாழ்க்கைசுனிதா வில்லியம்சு ஆகத்து 1998 இல் ஜான்சன் விண்வெளி மையத்தில் தனது விண்வெளி வீரர் பயிற்சியைத் தொடங்கினார்.[12] ![]() 14ம் விண்வெளி பயணக் குழுவில் சேர, திசம்பர் 9, 2006 அன்று டிஸ்கவரி விண்ணோடத்தின் மூலம் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்சு அனுப்பப்பட்டார். ஏப்ரல் 2007இல், உருசியக் குழுவினர் சுழற்சி செய்யப்பட்டனர். ![]() விண்வெளிக்கு சென்ற பிறகு, தனது குதிரைவால் முடியை லாக்ஸ் ஆஃப் லவ் நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்தார். சக விண்வெளி வீரர் ஜோன் ஹிக்ஜின்போதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இவரது தலைமுடியை வெட்டினார். அது எஸ்டிஎஸ்-116 குழுவினரால் மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்பட்டது.[15] ![]() மூன்றாவது விண்வெளி நடைப்பயணத்தில், இவர் ஒன்பது நாட்களில் மூன்று விண்வெளி நடைபயணங்களை முடிக்க 6 மணி 40 நிமிடங்கள் நிலையத்திற்கு வெளியே இருந்தார். 2007 ஆம் ஆண்டில், இவர் நான்கு விண்வெளி நடைப்பயணங்களில் 29 மணி 17 நிமிடங்கள் பதிவு செய்தார், இதற்கு முன்பு ஒரு பெண் விண்வெளியில் அதிக நேரம் நடந்து சென்ற கேத்ரின் சி. தோர்ன்டன் சாதனையை முறியடித்தார்.[5][12] டிசம்பர் 18,2007 அன்று, நான்காவது விண்வெளி நடைப்பயணத்தின் போது, பெக்கி விட்சன் 32 மணி நேரம், 36 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து சுனிதா வில்லியம்சை விஞ்சினார்.[16][17] விண்வெளியில் மாரத்தான்ஏப்ரல் 16, 2007 அன்று, விண்வெளியில் முதன்முதலில் மராத்தான் ஓடினார்.[18] 4 மணி 24 நிமிடங்களில் இலக்கினை அடைந்தார்.[19][20][21] நவம்பர் 19,2012 அன்று சக விண்வெளி வீரர்களான யூரி மாலென்செங்கோ மற்றும் அகிஹிகோ ஹோஷிடே ஆகியோருடன் சுனிதா பூமிக்குத் திரும்பினார். இவர்களது விண்வெளி திட்டமிடப்பட்ட இடத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ள கஜகஸ்தானின் அர்காலிக் நகரில் தரையிறங்கியது.[22] வணிகக் குழு திட்டம்சூலை 2015 இல், அமெரிக்க வணிக விண்வெளி பயணங்களுக்கான முதல் விண்வெளி வீரர்களில் ஒருவராக வில்லியம்சை நாசா அறிவித்தது.[23] அதைத் தொடர்ந்து, போயிங் மற்றும் எசுபேசுஎக்சு நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் வணிகக் குழு வாகனங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற விண்வெளி வீரர்களுடன் பயிற்சி பெறத் தொடங்கினார். ஆகஸ்ட் 2018இல் போயிங் சிஎஸ்டி-100 ஸ்டார்லைனரின் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு முதல் செயல்பாட்டு பணி விமானத்திற்கு (ஸ்டார்லைனர்-1) இவர் நியமிக்கப்பட்டார்.[24][25] சூன் 16, 2022 அன்று, வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்சு அடங்கிய இரண்டு நபர்கள் கொண்ட பயணமாக இருக்கும் என்பதை நாசா உறுதிப்படுத்தியது.[26] சூன் 5, 2024 அன்று, வில்லியம்சு விண்கலத்தின் விமானியாக சுனிதா சுற்றுப்பாதையில் சென்றபோது, சுற்றுப்பாதை விண்கலத்தின் பறக்கும் சோதனையில் பறந்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.[27] 17 ஆகத்து 2024 நிலவரப்படி, போயிங் ஸ்டார்லைனரின் சேவை தொகுதியின் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக சக விண்வெளி வீரர் பாரி வில்மோருடன் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் சுனிதா சிக்கிக்கொண்டார்.[28] பின்னர் பிப்ரவரி 2025இல் தரையிறங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்வெளி நடைப்பயணங்கள்ஆகத்து நிலவரப்படி, சுனிதா வில்லியம்சு மொத்தம் 50 மணி 40 நிமிடங்கள் ஏழு விண்வெளி நடைப்பயணங்களை மேற்கொண்டார், அந்த நேரத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த விண்வெளி நடைபயணிகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.[29][30] ஆகத்து 30, 2012 அன்று, இவரும் விண்வெளி வீரர் அகிஹிகோ ஹோஷிடே ஆகியோர் அனைத்துலக விண்வெளி ஓடத்துக்கு வெளியே வர முயன்றனர். ஆனால் அதில் தோல்வியடைந்தனர்.[31][32] சொந்த வாழ்க்கை![]() வில்லியம்ஸ் டெக்சாசினைச் சார்ந்த பெடரல் மார்ஷலான மைக்கேல் ஜே. வில்லியம்சைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் பல ஆண்டுகளாக தொழில்முறையில் பழக்கமானவர்கள். மேலும் இருவரும் தங்கள் தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் அலுங்கூர்திகளை பறக்கவிட்டனர். இவர்கள் டெக்சாசின் புறநகர் ஹூஸ்டனில் வசிக்கின்றனர். நவம்பர் 12, 2010 அன்று நேஷனல் ஜியோகிராஃபிக் அலைவரிசையில் டாக் விஸ்பரர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற்றார்.[33] இத்தம்பதியருக்கு குழந்தைகள் இல்லாததால் 2012ஆம் ஆண்டில், வில்லியம்சு அகமதாபாத்திலிருந்து ஒரு பெண்ணை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்தார்.[34] வில்லியம்ஸ் இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறார். திசம்பர் 2006இல், இவர் பகவத் கீதையின் பிரதியை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எடுத்துச் சென்றார். சூலை 2012இல், இவர் ஓம் சின்னத்தையும் உபநிடதங்களின் நகலையும் எடுத்தார்.[35] செப்டம்பர் 2007இல், வில்லியம்ஸ் சபர்மதி ஆசிரமத்திற்கும் அவரது பூர்வீக கிராமமான ஜூலாசனுக்கும் சென்றார். இவருக்கு சர்தார் வல்லபாய் படேல் விஸ்வ பிரதிபா விருது உலக குசராத்தி சமூகத்தினால் வழங்கப்பட்டது.[36] இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திய குடியுரிமை இல்லாமல் விருது பெரும் முதல் நபர் இவராவார். அக்டோபர் 4, 2007 அன்று, வில்லியம்ஸ் அமெரிக்கத் தூதரகப் பள்ளியில் உரையாற்றியப் பின்னர், இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை சந்தித்தார்.[37] வில்லியம்ஸ் சுலோவேனியாவிற்கும் பலமுறை சென்றுள்ளார்.[38] 2009ஆம் ஆண்டில், கிளப் சுலோவேனியன் விண்வெளி வீரர் (ஸ்லோவென்ஸ்கி அஸ்ட்ரோனாவ்ட்) வடமேற்கு சுலோவேனியாவில் உள்ள லெஸ், ட்ரெஜிக்கில் இவருக்கு ஒரு நினைவு அறையை ஏற்பாடு செய்தது[39] 1891இல் பிறந்த இவரது பெரியம்மா மரிஜா போஹின்ஜெக்கின் பிறப்பிடமாக லீசே இருந்தது. இவர் 1900 அல்லது 1901இல் 11 வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.[40] மே 2013இல், சுலோவேனியாவின் முன்னாள் அதிபர் போருட் பஹோர், சுலோவேனிய இளைஞர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்துவதில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக வில்லியம்ஸுக்கு பதக்கத்தை வழங்கினார்.[41] அக்டோபர் 2014இல் இவர் தங்கியிருந்தபோது, லுப்லஜானாவில் உள்ள வானியல் சங்கமான வேகாவிற்கு விஜயம் செய்தார்.[42][43] இவர் 2016இல் மீண்டும் சுலோவேனியாவுக்குச் சென்றார்.[44] சூன் 2017இல், நீதம் பொதுப் பள்ளிகள் குழு, நகரின் புதிய தொடக்கப் பள்ளிக்கு வில்லியம்ஸின் பெயரை வைக்க வாக்களித்தது.[45] மே 2020இல், 2020-இன் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, வாஷிங்டன், டி.சி., இந்திய தூதரகத்தில் மாணவர் மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் நேர்காணலில், அமெரிக்காவில் உள்ள 500,000க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பிற சர்வதேச மாணவர்களிடம் வில்லியம்ஸ் உரையாற்றினார்.[46] நிறுவனங்கள்வில்லியம்ஸ் விமானிகள் சோதனை சங்கம், விமான சோதனை பொறியாளர்கள் சங்கம் மற்றும் அமெரிக்க ஹெலிகாப்டர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார்.[47] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia