சுபன்சிரி ஆறுசுபன்சிரி ஆறு (Subansiri River) பிரம்மபுத்திரா நதியின் ஒரு கிளை நதியாகும். இந்திய மாநிலங்களான அசாம், அருணாசலப் பிரதேசம் மற்றும் சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத் ஆகிய பகுதிகளில் சுபன்சிரி ஆறு பாய்கிறது. 442 கிலோமீட்டர் நீளம் (275 மைல்) கொண்ட இந்த ஆறு 32640 சதுர கிலோமீட்டர் (12600 சதுரமைல்) வடிநிலப்பரப்பைக் கொண்டுள்ளது [1]. சுபன்சிரி ஆறுதான் பிரம்மபுத்திரா நதியின் மிகப்பெரிய கிளைநதியாகும். அதிகப்பட்சமாக விநாடிக்கு 18,799 கனமீட்டர் (663,900 கன அடி) தண்ணிரையும், குறைந்த பட்சமாக விநாடிக்கு 131 கன மீட்டர் (4600 கன அடி) தண்ணீரையும் சுபன்சிரி ஆறு வெளியேற்றுவதாகவும் அறியப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா நதியில் பாயும் மொத்த தண்ணீரின் அளவில் சுமார் 7.92% அளவு தண்ணிரை சுபன்சிரி ஆறு வழங்குகிறது [2]. இமய மலையின் சீனப்பகுதியிலிருந்து சுபன்சிரி ஆறு தோன்றி இந்தியாவின் கிழக்கிலும் தென்கிழக்கிலும் பாய்ந்து, பின்னர் அசாம் சமவெளிக்கு தெற்காகப் பாய்ந்து இலக்கீம்பூர் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதியுடன் கலக்கிறது. தாழ்நிலை சுபன்சிரி அணைதாழ்நிலை சுபன்சிரி அணை அல்லது தாழ்நிலை சுபன்சிரி நீர்மின் திட்டம் என்ற மின்னுற்பத்தித் திட்டம் இவ்வாற்றின் மேல் கட்டப்பட்டு வரும் ஓர் ஈர்ப்பு அணைத்திட்டமாகும். பலத்த எதிர்ப்புகளுக்கும்[3] பலவிதப் பிரச்சினைகளுக்கு நடுவிலும் இவ்வணை கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அசாமிய பொதுமக்களின் பார்வையில், கற்பனை டால்பின்கள், மீன்கள் மற்றும் மனித கதாபாத்திரங்களாக [4] புனையப்பட்டு அவற்றின் அடிப்படையிலேயே நோக்கப்படுகின்றது[5]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia