சுரேந்திரநாத் தாகூர்சுரேந்திரநாத் தாகூர் (Surendranath Tagore) (1872-1940) இவர் ஓர் பெங்காலி எழுத்தாளரும், இலக்கிய அறிஞரும் மற்றும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். குறிப்பாக இரவீந்திரநாத் தாகூரின் பல படைப்புகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்ததில் இவர் குறிப்பிடத்தக்கவராவார். [1] ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணிகொல்கத்தாவின் தாகூர் குடும்பத்தில் உறுப்பினரான இவர் 1872இல் மும்பையில் சத்யேந்திரநாத் தாகூர் மற்றும் ஞானதானந்தினி தேவி ஆகியோருக்குப் பிறந்தார். ஒரு பிரபல இலக்கிய எழுத்தாளரும், எழுத்தாளரும் மற்றும் இசைக்கலைஞருமான சுரேந்திரநாத்தின் சகோதரி இந்திரா தேவி சௌதுராணி, 1873 இல் பிறந்தார். [2] சுரேந்திரநாத்1893இல் கல்கத்தாவின் புனித சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். மேலும் இவரது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இவர் இந்திய தேசியவாத இயக்கத்தில் ஈடுபட்டார். தொழில்இவர் 1899 இல் மும்பையில் இயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை ஆதரித்தார். பின்னர் 1905 வங்காளப் பிரிவினைக்கு எதிராக வங்காள சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டார். [2] பிரமாதா மித்ராவின் கீழ் நிறுவப்பட்ட அனுசீலன் சமிதியின் பொருளாளராக பணியாற்றியபோது, சுரேந்திரநாத் இந்திய சுதந்திரத்திற்கான புரட்சிகர இயக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. [3] [4] சுரேந்திரநாத் பல இந்தியர்களுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை நிறுவிய பெருமைக்குரியவராவார். இதன் மூலம் இவர் உள்நாட்டு தொழில்களை ஊக்குவிக்க முயன்றார். பணிகள்விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறறுவுவதற்கான ஆரம்ப கட்டங்களில் சுரேந்திரநாத்தின் பணி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும் இவர் பல்கலைக்கழக வெளியீட்டு குழுவிலும் இடம் பெற்றார். 1923 சூலை முதல் 1929 ஏப்ரல் வரை தி விஸ்வ-பாரதி என்ற காலாண்டு இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். படைப்புகள்சுரேந்திரநாத் சிறு வயதிலிருந்தே தனது மாமா இரவீந்திரநாத் தாகூரால் செல்வாக்கு பெற்றார். இதனால் இவர் இலக்கியத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். [2] சுரேந்திரநாத்தின் படைப்புகளில் தனது சொந்த படைப்பு படைப்புகளும், இரவீந்திரநாத்தின் படைப்புகள் வங்காளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பும் அடங்கும். சுரேந்திரநாத்தின் சொந்த குறிப்பிடத்தக்க இலக்கிய படைப்புகளில் விஞ்ஞானத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த கட்டுரைகள் அடங்கியிருந்தன. அவை சாதனா மற்றும் பாரதி இதழ்களில் வெளியிடப்பட்டன. நவீன மதிப்பாய்வு மற்றும் பிரபாசி ஆகியவற்றிலும் இவர் பங்களித்தார். மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடப்பட்ட படைப்புகளில், இரவீந்திரநாத்தின் படைப்புகளான தி ஹோம் அண்ட் தி வேர்ல்ட் (1919), கிளிம்ப்ஸஸ் ஆப் பெங்கால் பிரம் லெட்டர்ஸ் (1921), மற்றும் 1950 இல் போர் சாப்டர்ஸ் (அவரது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது) ) போன்றவை. சுரேந்திரநாத் தாகூர் 1940இல் இறந்தார். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia