சுல்தானாவின் கனவுசுல்தானாவின் கனவு (Sultana's Dream) என்பது 1905 ஆம் ஆண்டு வெளியான பெண்ணிய கனவுச் சமுதாய குறும் புதினமாகும். இது வங்காளத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் பெண்ணியவாதியும், எழுத்தாளரும், சமூக சீர்திருத்தவாதியுமான ரெக்கையா சக்காவத் ஹுசைனால் எழுதப்பட்டது.[1][2] இது அதே ஆண்டில் மதராசை தளமாகக் கொண்ட ஆங்கில பத்திரிகையான தி இந்தியன் லேடீஸ் இதழில் வெளியிடப்பட்டது. [3][a] கதைஇது பெண்ணிய கனவுச் சமுதாயத்தை (லேடிலேண்ட் என்று அழைக்கப்படுகிறது) சித்தரிக்கிறது, இந்தக் கதையில் பெண்கள் நாட்டில் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால் ஆண்கள் வீட்டினுள் ஒதுங்கியிருக்கிறார்கள், இது பர்தாவின் பாரம்பரிய நடைமுறையின் ஆடி-தோற்றுரு போல உள்ளது. பெண்களின் அறிவியல் புனைவு கண்டுபிடிப்புகள் சமையல் போன்ற வேலைகளை எளிதாக்குகின்றன - உழைப்பு குறைந்த விவசாயம், பறக்கும் மகிழுந்துகளை இயக்கும் "மின்" தொழில்நுட்பம்; சூரிய ஆற்றலை சேகரிக்கும் கருவி, வானிலையை கட்டுப்படுத்துவது என்பது போன்ற பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்றனர். இவ்வாறு இந்தக் கதையில் "ஒரு வகையான பாலின அடிப்படையிலான பிளானட் ஆஃப் தி ஏப்ஸ், பாத்திரங்கள் தலைகீழாக மாறி, சித்தரிக்கபட்டுள்ளது.[4] கதையின் தோற்றம்ஹுசைனின் கூற்றுப்படி, சுல்தானாஸ் டிரீம் கதையை இவர் தன் கணவர் கான் பகதூர் சையத் சகாவத் ஹுசைனுடன், ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பயணத்தின்போது பொழுது போக்காக எழுதினார். இவரது கணவர் இதை பாராட்டி ஊக்குவித்தார். மேலும் ஹுசைனை ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் ஊக்குவித்தார். இவ்வாறு, சுல்தானாஸ் டிரீம் கதையை ஆங்கிலத்தில் எழுதி, மொழியில் தனது திறமையை கணவருக்கு நிரூபிக்கும் ஒரு வழியாக செய்தார். சகாவத் இக்கதையால் மிகவும் ஈர்க்கப்பட்டார், 1905 ஆம் ஆண்டில் முதல் முறையாக கதையை வெளியிட்ட தி இந்தியன் லேடீஸ் பத்திரிகைக்கு அனுப்ப ஹுசைனை தூண்டினார். இந்த கதை பின்னர் 1908 இல் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது.[5] தமிழ் மொழிபெயர்ப்புஇந்தக் குறும்புதினமானது சாலை செல்வம், வ. கீதா மொழிபெயர்ப்பில் தாரா பதிப்பக வெளியீடாகத் தமிழில் ‘சுல்தானாவின் கனவு’ என்ற பெயரில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[6][7] குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia