சுவரணை விளம்பரப் பலகை
சுவரணை விளம்பரப் பலகை (billboard) (ஐக்கிய இராச்சியத்தில், பொதுநலவாய நாடுகளில் "hoarding") என்பன வெளியிடங்களில் போக்குவரத்து மிகுந்த சாலையோரங்களில் விளம்பரப் படுத்துவதற்காக எழுப்பப்படும் பெரிய சுவரணைய சட்டங்களாகும். இவற்றால் அந்த வழியே செல்லும் நடைபாதை பயனர்கள், ஓட்டுனர்களின் கவனத்தை ஈர்க்குமாறு விளம்பரப்படுத்த முடிகிறது. மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்துவதாலும் நகைச்சுவையான வாசகங்கள், கேலிச்சித்திரங்கள் மூலமாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க முடிவதாலும் சந்தைப்படுத்தும் முயற்சிகளில் இவ்வழிக்கு தனித்தன்மை உள்ளது. பிளாக்சு போர்ட் எனப்படும் பாலிவினைல் பலகைகளில் எண்ம ஒளிப்படக்கருவிகள் மூலம் எடுத்த காட்சிகளும் கணினி உதவியுடன் வடிவமைத்த காட்சிகளும் மிகுந்த காட்சித்திறனுடன் வெளிப்படுத்தப் படுவதால் ஈர்ப்பு கூடுதலாக உள்ளது. வண்ணமிகு மின்விளக்குகளும் இவற்றிற்கு மெருகூட்டுகின்றன. விளம்பர பலகைகளினால் விபத்துக்கள் கூடுதலாக நிகழ்கின்றன என்ற கருத்து வலுத்து வருகிறது. இருப்பினும், போக்குவரத்து விபத்துகளுக்கும் விளம்பர பதாகைகளுக்கும் உள்ள தொடர்பை ஆய்வுசெய்தபோது ஓட்டுநர்கள் தாங்கள் முக்கியமான நேரத்தில் விளம்பரங்களால் கவனம் சிதறியதாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் என தெரிய வந்தது. மாறுகின்ற செய்திகள் தாங்கிய விளம்பரப் பலகைகளின் அண்மையில் இந்தக் குறைபாடுகளுடனேயே எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் அங்கு கூடுதலாக விபத்துக்கள் நேர்ந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.[1] இதேபோன்ற நிகழ்தகைவை இலத்திரனியல் விளம்பரப் பலகைகளின் அண்மையிலும் கண்டறிந்துள்ளனர்.[2] ஆனால் நெடுந்தொலைவுப் பயணங்களில், அடுத்தடுத்து ஊர்களே இல்லாத பாதைகளில், விளம்பரப் பலகைகள் ஓட்டுநரின் சோர்வுணர்ச்சிக்கு மாற்றாக அமைகின்றன. ஒரே போன்ற சாலைக்காட்சியை பார்த்து சலித்த கண்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டுவனவாக உள்ளன. [3]
வரையப்பட்ட விளம்பரப் பலகைகள்பிற விளம்பரப் பலகை வகைகள்விளம்பரப் பலகை வைக்கத்தக்க இடங்கள்காட்சி,சூழலியல் மற்றும் பண்பாட்டுக் கவலைகள்சாலை பாதுகாப்புகட்டுப்பாடு சட்டங்கள்மேற்சான்றுகள்
வெளியிணைப்புகள்![]() The Wikibook Marketing மேலதிக விவரங்களுள்ளன: சந்தைப்படுத்தல் |
Portal di Ensiklopedia Dunia