சுவாகிலி மக்கள்
சுவாஹிலி மக்கள் கிழக்கு ஆபிரிக்கக் கரையோரப் பகுதிகளில் வாழ்பவர்கள் ஆவர். இவர்கள் கெனியா, தான்சானியா, வடக்கு மொசாம்பிக் ஆகிய நாடுகளில் உள்ளார்கள். இப்பகுதிகளில் 300,000 தொடக்கம் 750,000 வரையான சுவாஹிலி மக்கள் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது. சுவாஹிலி என்னும் பெயர், கடற்கரையோரம் வாழ்பவர்கள் என்னும் பொருள்படும் சவாஹில் என்னும் அரபிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இம் மக்கள் சுவாஹிலி மொழியைப் பேசுகிறார்கள். இவர்களில் பெரும்பாலேனோர் தாங்கள் வாழும் நாடுகளின் உத்தியோக பூர்வ மொழிகளையும் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள், இதன்படி, தான்சானியாவிலும், கெனியாவிலும் வாழும் சுவாஹிலிகள் ஆங்கிலத்தையும், மொசாம்பிக்கிலும் சோமாலியாவிலும் உள்ளவர்கள் போத்துக்கேய மொழியையும், காமரோஸ் நாட்டில் வாழ்பவர்கள் பிரெஞ்சு மொழியையும் பேசுகிறார்கள். கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் சுவாஹிலி மொழி பேசுபவர்கள் எல்லோருமே சுவாஹிலிகள் அல்ல. சுவாஹிலிகள் அவர்களில் ஒரு சிறிய வீதத்தினரே ஆவர். |
Portal di Ensiklopedia Dunia