சுவாதி தீட்சித்சுவதி தீட்சித் (Swathi Deekshith) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு, தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். டோர் நாம் (2012), லேடீஸ் & ஜென்டில்மேன் (2015), சிம்பா (2017) போன்ற படங்களில் நடித்தார்.[1] 2020 ஆம் ஆண்டில், தெலுங்கு உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியான <i id="mwGA">பிக் பாஸ் 4 இல்</i> வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார், 28 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார்.[2] தொழில்தீட்சித் 2009 ஆம் ஆண்டில் அந்தமைன பாமலு என்ற தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பொழுதுபோக்கு துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார், அந்த தொலைக்காட்சி சிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வென்றார். இந்த வெற்றி இவர் விளம்பரப் படங்களில் தோன்றவும், இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாகக தோன்றவும் வழிவகுத்தது. இவரது முதல் பெரிய நடிப்பு வாய்ப்பானது வங்கத் திரைப்படமான டோர் நாம் (2012). அடுத்து தெலுங்கு நாடகத் திரைப்படமான பிரேக் அப் (2012) இல் நடித்தார். 2014 ஆம் ஆண்டில், ராம் கோபால் வர்மாவின் தெலுங்கு திகில் படமான தியத்தில் நடித்தார். அது தீட்சித்துக்கு ஒரு திருப்புமுனையை அளித்தது. அப்படத்தின் ஒளிப்பதிவாளர் சதீஷ் முத்யாலா பிரேக் அப் படத்தில் முன்னோட்டத்தை வர்மாவுக்கு காட்டி வாய்ப்பை பெற்றுத் தந்தார். படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்த போதிலும், படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டு வெளியிடப்படாமல் உள்ளது. இந்த காலகட்டத்தில், இவர் ஜம்ப் ஜிலானி (2014) படத்தில், அல்லாரி நரேசின் ஜோடியாக ஒரு கிராமத்து பெண்ணாகவும், லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் (2015) என இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தார்.[3][4] 2017 ஆம் ஆண்டில், தீட்சித் மூன்று படங்களில் தோன்றினார், அந்த ஆண்டில் இவரது முதல் வெளியீடு அஞ்சலியுடன் இணைந்து நடித்த சித்ரங்கடா என்ற திகில் படமாகும். பின்னர் இவர் தமிழ் படங்களில் அறிமுகமானார். குறைந்த செலவில் எடுக்கபட்ட திகில் படமான சதுர அடி 3500 மற்றும் பரத் உடன் இணைந்து சிம்பா என்ற கற்பனைக் கதைப் படத்திலும் நடித்தார்.[5][6] திரைப்படவியல்
தொலைக்காட்சி
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia