சுவாமிநாதம்சுவாமிநாதம் அல்லது சாமிநாதம் என்பது ஒரு தமிழ் இலக்கண நூல். ஐந்திலக்கணமும் கூறுவது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லிடைக் குறிச்சி என்னும் ஊரினரான சுவாமிக் கவிராயர் என்பார் இந்நூலின் ஆசிரியர் ஆவார்.[1]. அமைப்புஇயற்றமிழின் ஐந்து இலக்கணங்களும் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அணியதிகாரம் என்னும் ஐந்து பெரும் பிரிவுகளின் கீழ் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு அதிகாரமும் மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வுட்பிரிவுகள் இந்நூலில் மரபுகள் எனப் பெயரிடப்பட்டுள்ளன. இப் பிரிவுகளின் விபரங்கள் பின்வருமாறு:
இந்நூலில் வெண்பாவாக அமைந்த ஒரு விநாயகர் வணக்கப்பாடலும், தொடர்ந்து திருத்தாண்டகம் என்னும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியப்பாவால் ஆன பொதுப் பாயிரமும் சிறப்புப் பாயிரமுமாகப் 11 பாடல்கள் உள்ளன. இவை தவிர நூலில் ஐந்து அதிகாரங்களிலுமாக மொத்தம் 201 பாடல்கள் உள்ளன[2] குறிப்புகள்உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia