சுவோட் பகுப்பாய்வு

SWOT பகுப்பாய்வு என்பது ஒரு உத்தி திட்டமிடல் முறையாகும், இது ஒரு செயல்திட்டத்தின் அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் பலத்தை (Strengths), பலவீனத்தை (Weaknesses), வாய்ப்புகளை (Opportunities), மற்றும் அச்சுறுத்தல்களை (Threats) மதிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. இது தொழில்நிறுவனத்தின் அல்லது செயல்திட்டத்தின் நோக்கத்தைக் குறிப்பிடுவதுடன், அந்த நோக்கத்தை எட்டுவதற்கு சாத்தியமான அல்லது சாத்தியமற்ற, உள்ளிருக்கும் மற்றும் வெளியில் இருக்கும் காரணிகளைக் கண்டறிந்து அளிக்கிறது. இந்த நுட்பம் ஆல்பர்ட் ஹம்பரே, பார்ச்சூன் 500 நிறுவனங்களின் தகவல்களைப் பயன்படுத்தி, 1960-கள் மற்றும் 1970-களில் ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு பேரவைக்குத் தலைமை வகிக்கும் பொது இந்த நுட்பத்தை செயற்படுத்தினார்.

ஒரு SWOT பகுப்பாய்வானது முதலில் தேவையான இறுதி நிலை அல்லது நோக்கத்தை வரையறுப்பதில் இருந்து தொடங்க வேண்டும். ஒரு SWOT பகுப்பாய்வு, உத்தி திட்டமிடல் முறைக்குள் உட்பட்டிருக்கக்கூடும். SWOT மற்றும் SCAN பகுப்பாய்வு உட்பட, உத்தி திட்டமிடல் பெருமளவிலான ஆராய்ச்சியின் பகுதியாக இருந்து வருகிறது.

  • பலங்கள் (Strengths): நோக்கத்தை எட்டுவதற்கு உதவும் குறிப்பிட்ட நபரின் அல்லது நிறுவனத்தின் தன்மைகள்
  • பலவீனங்கள் (Weaknesses): நோக்கத்தை எட்டுவதற்கு தடையாக இருக்கும் நபரின் அல்லது நிறுவனத்தின் பண்புகள்.
  • வாய்ப்புகள் (Opportunities): நோக்கத்தை எட்டுவதற்கு உதவியாக இருக்கும் புறநிலைமைகள்.
  • அச்சுறுத்தல்கள் (Threats): நோக்கத்தைப் பாதிக்கும் புறநிலைமைகள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நோக்கத்தை அடைவதற்காக, திட்டத்தின் செயல்முறையில் இருக்கும் அடுத்தடுத்த படிகள் இந்த முறையிலிருந்து பெறப்படும் என்பதால், SWOT-களைக் கண்டறிவது மிகவும் அத்தியாவசியமாகும்.

முதலாவதாக, அளிக்கப்படும் SWOT-களின் மூலமாக நோக்கம் அடையக்கூடியது தானா என்பதை முடிவெடுப்பவர்கள் தீர்மானிக்க வேண்டும். அடைய முடியாத நோக்கமாக இருந்தால், வேறு நோக்கம் தீர்மானிக்கப்பட்டு, செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டும்.

பொதுவாக கல்வித்துறையில் பலங்களையும், பலவீனங்களையும், வாய்ப்புகளையும் மற்றும் எதிரிடைகளையும் கண்டறிய மற்றும் குறிப்பிட்டுக் காட்ட SWOT பகுப்பாய்வு பெருமளவிற்கு பயன்படுத்தப்படுகிறது [சான்று தேவை]. இது குறிப்பாக, முன்னேற்றத்திற்கான பகுதிகளைக் கண்டறிய மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது [சான்று தேவை].

பொருத்துதலும், மாற்றுதலும்

SWOT-ஐ பயன்படுத்துவதற்கான மற்றொரு வழி பொருத்துதலும் , மாற்றுதலுமாகும் .

பலங்களை வாய்ப்புகளுடன் பொருத்துவதன் மூலமாக சவாலான ஆதாயங்களைக் கண்டறிய பொருத்தும் உத்தி பயன்படுத்தப்படுகிறது.

பலவீனங்கள் அல்லது அச்சுறுத்தல்ளை பலங்களாகவும், வாய்ப்புகளாகவும் மாற்றுவதற்கு மாற்றும் உத்தியைச் செயல்படுத்த மாற்றும் உத்தி பயன்படுகிறது.

மாற்றுதல் உத்திக்கான ஓர் எடுத்துக்காட்டு என்னவென்றால், புதிய சந்தைகளைக் கண்டறிவது.

பலவீனங்களையோ அல்லது அச்சுறுத்தல்களையோ ஒரு நிறுவனத்தால் மாற்ற முடியவில்லை என்றால் அவற்றை குறைக்கவோ அல்லது தவிர்க்கவோ முயற்சிக்க வேண்டும்.[1]

SWOT பயன்பாட்டின் ஆதாரம்

இன்றைய நிலையில் கவனத்தில் எடுக்கப்படும் உத்திகள் சுவோட் பகுப்பாய்வைத் தடுக்கக் கூடும். ஜெ. ஸ்காட் ஆர்ம்ஸ்ட்ராங் குறிப்பிடுகையில், "சுவோட் முறையைப் பயன்படுத்துபவர்கள், தாங்கள் திட்டமிடுதலுக்கான ஒரு சிறந்த பணியைச் செய்திருப்பதாக தீர்மானிக்கிறார்கள். மேலும் நிறுவனத்தின் நோக்கங்கள் அல்லது ROI கணக்கிடுதல் போன்ற நுண்மையான விஷயங்களுக்காக மாற்று உத்திகளை வரையறுப்பதை அவர்கள் தவிர்த்துவிடுகிறார்கள்."[2] மேனன் et al. (1999) [3] மற்றும் ஹில் மற்றும் வெஸ்ட்புரூக் (1997) [4] ஆகியோரின் ஆய்வுகள், சுவோட் முறையானது செயல்திறனைப் பாதிக்கக்கூடும் என்று எடுத்துக்காட்டுகிறது. சுவோட்டிற்கு மாற்றாக, சிறந்த நிறுவன செயல்திறனை அளிக்கும் வேறொரு முறையான 5-படி மாற்று அணுகுமுறையை இவர் விளக்குகிறார்.[5]

இந்த விமர்சனங்கள் பழைய சுவோட் பகுப்பாய்விற்கு தான் அளிக்கப்பட்டன. அது "சுவோட் பகுப்பாய்வின் உத்தி மற்றும் ஆக்கப்பூர்வமான பயன்" என்ற தலைப்பின்கீழ் மேலே விவரிக்கப்பட்ட சுவோட் பகுப்பாய்விற்கு முன்னர் இருந்தது. ஒரு நோக்கத்தைக் குறிப்பிடாத சுவோட் பகுப்பாய்வுகளின் எடுத்துக்காட்டுகள் கீழே "மனிதவள மேம்பாடு" மற்றும் "சந்தைப்படுத்தல்" என்பதன்கீழ் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

உட்காரணிகளும், புறக்காரணிகளும்

எவ்வித SWOT பகுப்பாய்வின் இலக்கும், நோக்கத்தை அடைவதற்கு தேவையான முக்கிய உட்காரணிகளையும், புறக்காரணிகளையும் கண்டறிவதே ஆகும். இது நிறுவனத்தின் தனித்துவ விழுமியத்தொடரில் இருந்து வருகிறது. SWOT பகுப்பாய்வு தகவலின் முக்கிய பகுதிகளை இரண்டு முக்கிய பிரிவுகளுக்குள் கொண்டு வருகிறது:

  • உட்காரணிகள் - நிறுவனத்தின் உள்ளே இருக்கும் பலங்களும் , பலவீனங்களும் .
  • புறக்காரணிகள் - நிறுவனத்திற்கு புறச்சூழல்களால் உண்டாகும் வாய்ப்புகளும் , அச்சுறுத்தல்களும் - காரணிகளைக் கண்டறிய உதவுவதற்காக PEST அல்லது PESTLE பகுப்பாய்வைப் பயன்படுத்தும்

நிறுவனத்தின் நோக்கங்களின் மீது உட்காரணிகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பொறுத்து அது பலங்களாகவோ அல்லது பலவீனங்களாகவோ பார்க்கப்படும். ஒரு நோக்கத்திற்கு பலங்களாக இருப்பவை மற்றொரு நோக்கத்திற்கு பலவீனங்களாக இருக்கக்கூடும். இந்த காரணிகள் அனைத்து 4P-களையும் உள்ளடக்கி இருக்கும்; அத்துடன் தனிநபர், நிதி, உற்பத்தித்திறன், மற்றும் இன்ன பிறவற்றையும் கவனத்தில் எடுக்கும். புறக்காரணிகள் பேரினப்பொருளியல் (macroeconomic) விஷயங்களையும், தொழில்நுட்ப மாற்றங்கள், சட்ட நுணுக்கங்கள், மற்றும் சமூக-பண்பாட்டு மாற்றங்கள், அத்துடன் சந்தையிட மாற்றங்கள் அல்லது போட்டி நிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை உட்கொண்டிருக்கும். முடிவுகள் பெரும்பாலும் ஓர் அணி (matrix) வடிவத்தில் தான் அளிக்கப்படும்.

சுவோட் பகுப்பாய்வு என்பது வகைப்படுத்தலில ஒரு முறையாதலால், அது அதற்கே உரிய பலவீனங்களையும் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, நோக்கங்களை எட்டுவதில் உண்மையில் எது தேவையானது என்று சிந்திக்காமல், மாறாக நிறுவனங்கள் பட்டியலைத் தொகுத்தெழுதி அதன்படி செயல்பட தூண்டிவிடலாம். மேலும் அது முடிவு பட்டியலை மேலோட்டமாகவும், தெளிவான முன்னுரிமையைச் சுட்டிக்காட்டாமலும் வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, பலவீனமான சந்தர்ப்பங்கள் மீதமிருக்கும் வலுவான அபாயங்கள் என்பதாக எடுத்துக்காட்டப்படலாம்.

எந்த SWOT நுழைவும் மிக விரைவாக தவிர்க்கப்படாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். உத்திகளை உருவாக்கும் அதன் மதிப்பால் ஒவ்வொரு தனித்தனி SWOT-களின் முக்கியத்துவம் பெறப்படும். SWOT வகை உருவாக்கும் மதிப்புமிக்க உத்திகள் மிகவும் முக்கியமானவையாகும். எவ்வித உத்தியையும் உருவாக்காத ஒரு SWOT வகை, முக்கியமானது கிடையாது.

சுவோட் பகுப்பாய்வின் பயன்

SWOT பகுப்பாய்வின் பயன் இலாப நோக்கமுடைய நிறுவனங்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு தேவையான இறுதி-நிலை (அதாவது நோக்கம்) வரையறுக்கப்படும் போது, எந்த முடிவை எடுப்பதிலும் சுவோட் பகுப்பாய்வு பயன்படக்கூடும். எடுத்துக்காட்டுக்கள்: இலாப நோக்கமில்லா அமைப்புகள், அரசுத்துறைகள், மற்றும் தனிநபர்களுக்கும். நெருக்கடிக்கு முந்தைய திட்டமிடுதலிலும், நெருக்கடி முன்தடுப்பு மேலாண்மையிலும் கூட SWOT பகுப்பாய்வு பயன்படுத்தப்படக்கூடும். SWOT பகுப்பாய்வு ஒரு வாய்ப்புநிலை ஆய்வின் போது, ஒரு பரிந்துரையை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும்.

சுவோட் இடச்சூழலின் பகுப்பாய்வு

சுவோட்-இடச்சூழலானது, ஒட்டுமொத்த நோக்கத்திற்கு இடையிலான தொடர்புகளை நிறுவுகிறது, மேலும் SWOT-காரணிகளையும் அடிக்கோட்டிட்டு காட்டுகிறது, அத்துடன் ஓர் பயன்பாட்டிற்கு எளிய விசாரணைக்கேற்ற முப்பரிமாண இடச்சூழலையும் வழங்குகிறது.

ப்ரென்டன் கிட்ஸ், லீஃப் எட்வின்சன் மற்றும் டோர்டு பெடிங் (2000) ஆகியோரின் ஆய்வுப்படி, SWOT-இடச்சூழலானது, ஒப்பிடக்கூடிய நோக்கங்களின் மாறுபட்ட செயல்திறனை உருவகிப்பதன் மூலமாகவும், முன்னுணர்தலினாலும் வெவ்வேறு நிர்வாக சூழல்களை எடுத்துக்காட்டுகிறது.[6]

சார்புரீதியான செயல்திறனில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்டறியப்படுகின்றன. மிகுந்த அச்சுறுத்தல்களைக் கொண்டிருக்கும் செயல்திட்டங்கள் (அல்லது முறைமைகளின் பிற அலகுகள்) அல்லது வாய்ப்பு கொண்டிருக்கும் நோக்கங்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன.

SWOT-இடச்சூழல் பயன்பாட்டில் இருக்கும் விஷயத்தோடு இருக்கும் அல்லது அதிகபட்ச விளைவை ஏற்படக்கூடிய பலம்/பலவீன காரணிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது (எடுத்துக்காட்டாக, மூலதன மதிப்பில் ஏற்றயிறக்கங்கள்).

பெருநிறுவன திட்டமிடல்

நிறுவனம் அதன் நோக்கங்களை எட்டுவதற்கு உதவும் திட்டங்கள் மற்றும் உத்திகளின் முன்னேற்றத்தின் ஒரு பிரிவாக இருக்க, பின்னர் அந்த நிறுவனம் பெருநிறுவன திட்டமிடல் என்று அறியப்படும் ஒரு நெறிமுறையோடு கூடிய/உறுதியான செயல்முறையைப் பயன்படுத்தும். PEST/PESTLE உடன் சேர்ந்து SWOT-ம் வணிக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளுக்கான ஓர் அடித்தளமாக பயன்படுத்தப்படும்.[7]

  • நோக்கங்களை அமைத்தல் - நிறுவனம் என்ன செய்யவிருக்கிறது என்பதை வரையறுத்தல்
  • சுற்றுச்சூழலை ஆய்விடுதல்
    • நிறுவன SWOT-ன் உள் மதிப்பீடு, இது தற்போதைய சூழலின் மதிப்பீட்டையும், தயாரிப்புகள்/சேவைகளின் ஓர் பிரிவையும் மற்றும் தயாரிப்பு/சேவை வாழ்நாள்வட்டத்தின் ஒரு பகுப்பாய்வையும் உள்ளடக்கியதாய் இருக்கும்.
  • நடைமுறையில் இருக்கும் உத்திகளின் பகுப்பாய்வு , இது உள்மதிப்பீடு/புறமதிப்பீடு ஆகியவற்றின் முடிவுகளில் இருந்து ஓர் இணக்கத்தை வரையறுக்க வேண்டும். சுற்றுச்சூழல் காரணிகளில் நோக்கமிடும் GAP-பகுப்பாய்வையும் இது உட்கொண்டிருக்கக்கூடும்.
  • உத்தி சார் பிரச்சினைகளை வரையறுத்தல் - நிறுவனத்தால் கவனிக்கப்பட வேண்டிய ஒரு பெருநிறுவன திட்டத்தின் முன்னேற்றத்தியில் இருக்கும் முக்கிய காரணிகள்
  • புதிய/மறுசீரமைக்கப்பட்ட உத்திகளை முன்னேற்றம் செய்தல் - உத்தி பிரச்சினைகளின் மறுசீரமைக்கப்பட்ட பகுப்பாய்வானது நோக்கங்களில் மாற்றப்பட வேண்டியதைக் குறிக்கும்
  • அடையவேண்டிய முக்கிய காரணிகளை உருவாக்குதல் - நோக்கங்களை எட்டுவதும், உத்தி நிறுவுதலும்
  • உத்தி நிறுவுதலுக்காக செயல்பாட்டு, மூல ஆதார, செயல்திட்டங்களுக்கான திட்டங்களைத் தயாரித்தல்
  • முடிவுகளை கண்காணித்தல் - திட்டங்களைக் கருத்தில் கொண்டு பொருத்தி அமைத்தல், சரிப்படுத்தும் நடவடிக்கை எடுத்தல் என்பது நோக்கங்கள்/உத்திகளைத் திருத்துதல் என்பதைக் குறிக்கும்.[8]

சந்தைப்படுத்தல்

பல போட்டியாளர்களின் பகுப்பாய்வுகளில், சந்தையில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளரின் விரிவான சுயவிபரங்களையும் சந்தையாளர்கள் உருவாக்குகிறார்கள், SWOT-ஐ பயன்படுத்தி அவர்களோடு தொடர்புடைய போட்டியாளரின் பலங்கள் மற்றும் பலவீனங்களில் குறிப்பாக கவனம் செலுத்துகிறார்கள். சந்தைப்படுத்தல் மேலாளர்கள் ஒவ்வொரு போட்டியாளரின் செலவு முறை, இலாப ஆதாரங்கள், மூல ஆதாரங்கள் மற்றும் சவால்கள், போட்டியாளரின் நிலை மற்றும் பொருளின் வேறுபாடு, மேம்பாட்டு ஒருங்கிணைப்பின் அளவு, தொழில்துறை முன்னேற்றத்துக்கு வரலாற்றுரீதியான பிரதிபலிப்புகள், மற்றும் பிற காரணிகளையும் ஆராய்வார்கள்.

துல்லியமான சந்தை பகுப்பாய்வைச் செய்வதற்கு தேவையான தரவைச் சேகரிக்க சந்தைப்படுத்தல் மேலாண்மை எப்போதும் அதற்கான ஆராய்ச்சிகளில் முதலீடு செய்வதை தேவையென்று காண்கிறது. அதன்படி, இந்த தகவல்களைப் பெறுவதற்காக நிர்வாகம் அடிக்கடி சந்தை ஆராய்ச்சியை (மாற்றுமுறையில் சந்தைப்படுத்தல் ஆராய்ச்சியைப்) செய்கிறது. சந்தை ஆராய்ச்சியைச் செய்வதற்காக சந்தையாளர்கள் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள், அவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படுபவைகளில் சில:

  • தர சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி, கவனிக்க வேண்டிய குழுக்கள் போன்றவை
  • அளவு சார்ந்த சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி, புள்ளிவிபர ஆய்வுகள் போன்றவை
  • சந்தைகளைப் பரிசோதித்தல் போன்ற பரிசோதனை நுட்பங்கள்
  • மக்கள் இன அமைப்பியல் (அந்தந்த இடத்திற்குரிய வகையில்) ஆய்வு போன்ற ஆய்வு நுட்பங்கள்
  • சந்தைப்போக்குகளைக் கண்டறிய உதவவும், நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பகுப்பாய்விற்கு தகவல் அளிக்கவும் சந்தைப்படுத்தல் மேலாளர்கள் பல்வேறு சுற்றுச்சூழல் ஆய்விடலையும், போட்டியாளர் உத்தி செயல்முறைகளையும் வடிவமைத்து, மேற்பார்வையிடுவார்கள்.

HRM-ல் வல்லுமைப்பெற்ற ஒரு சிறிய மேலாண்மை ஆலோசனைநிறுவனத்தின் சந்தை நிலைமையை ஆராய SWOT பயன்படுத்துதல்.[8]

பலங்கள் பலவீனங்கள் வாய்ப்புகள் அபாயங்கள்
சந்தையிட மதிப்பு தொழில்கூட்டாளி மட்டத்தில் அல்லாமல், மாறாக செயல்பாட்டு மட்டத்தில் ஆலோசகர்களின் பற்றாக்குறை ஒரு நன்கு வரையறுக்கப்பட்ட பொருந்தமான சந்தையுடன் சிறப்பாக அமைக்கப்பட்ட நிலைமை பெரிய ஆலோசனை நிறுவனங்கள் ஒரு சிறிய அளவில் செயல்படுதல்
HRM ஆலோசனை நிறுவனத்தில் தொழில்கூட்டாளி அளவில் வல்லமைப் பெறுதல் அளவு அல்லது திறமையின்மையின் காரணமாக பன்முக-ஒழுக்க முறைமைகளுடன் தொடர்பு கொள்ள முடியாமல் இருத்தல் HRM அல்லாத பிற பகுதிகளில் ஆலோசனைக்கான கண்டறியப்பட்ட சந்தை சந்தையில் இறங்க பார்த்திருக்கும் பிற சிறிய ஆலோசனை நிறுவனங்கள்

குறிப்புதவிகள்

  1. எடுத்துக்காட்டாக பார்க்கவும்: மேத்தா, எஸ். (2000) சந்தைப்படுத்தல் மூலோபாயம் [1]
  2. "மெனிவோல்ட்ஸ்.காம்: SWOT-ல் செய்யக்கூடாதவை: சந்தைப்படுத்தல் திட்டமிடுதலின் மீதான ஒரு குறிப்பு". Archived from the original on 2009-03-23. Retrieved 2010-03-04.
  3. Menon, A. et al. (1999). "Antecedents and Consequences of Marketing Strategy Making". Journal of Marketing 63(2): 18–40. doi:10.2307/1251943. 
  4. Hill, T. & R. Westbrook (1997). "SWOT Analysis: It’s Time for a Product Recall". Long Range Planning 30 (1): 46–52. doi:10.1016/S0024-6301(96)00095-7. 
  5. J. Scott Armstrong (1982). "The Value of Formal Planning for Strategic Decisions". Strategic Management Journal 3: 197–211. doi:10.1002/smj.4250030303. 
  6. எதிர்தொடர்பு, கேள்விக்குட்பட்ட முப்பரிமாண நிலக்காட்சிகளுக்குள் ப்ரென்டன் கிட்ஸ், லீஃப் எட்வின்சன் மற்றும் டோர்டு பெடிங் (2000) ஆகியோரின் வரலாற்றுரீதியான நிறுவன செயல்பாட்டின் துல்லியமான அறிவு http://de.scientificcommons.org/534302 பரணிடப்பட்டது 2009-05-06 at the வந்தவழி இயந்திரம்
  7. ஆம்ஸ்ட்ராங். எம். மனிதவள மேலாண்மை பயிற்சிக்கான கையேடு (10ஆம் பதிப்பு) 2006, கோகன் பேஜ், இலண்டன் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7494-4631-5
  8. 8.0 8.1 ஆம்ஸ்ட்ராங்.எம் மேலாண்மை செயல்முறைகளும், செயல்பாடுகளும், 1996, இலண்டன் CIPD பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85292-438-0

புற இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya