சூத்திரம்சூத்திரம் என்னும் சொல் இலக்கண நூலிலுள்ள பாடலைக் குறிக்கும். இதனை நூற்பா என வழங்குகிறோம். நூல் என்னும் சொல் இலக்கண நூலை மட்டும் குறிக்கும்.[1] நூலில் உள்ள பாடல்கள் நூற்பா. சூத்திரம் என்னும் சொல்லைத் தமிழ்ச்சொல் எனலாம். [2] சூத்திரம் சில எழுத்துக்களால் இயன்று செய்யுள் நடையில் இருக்கும். விரிவாகச் சொல்லவேண்டிய உரையை உள்ளே அடக்கிக்கொண்டிருக்கும். நுட்பமும் ஒட்பமும் கொண்டிருக்கும். அசைக்க முடியாத உண்மைகளைக் கூறும். அளக்க முடியாத அரும்பொருளைக் கொண்டிருக்கும். பலவகையான பயன்களை மொழிக்கு நல்கும். [3] கண்ணாடி நிழல்போல் மொழியின் இயல்பை உள்ளபடியே வெளிப்படுத்தும். [4] மொழிச் செய்திகளை விடுபடாமல் கூறும். காரணம் காட்டியும் எடுத்துக்காட்டுகள் தந்தும் விரித்துரைக்கும். [5] சூத்திரத்தில் சொல்லப்படுவதைக் காட்டுவது காண்டிகை-உரை. [6] சூத்திரம் வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்தும் செய்திகளும் உண்டு. (விருத்தி)உரை இதனை வெளிப்படுத்தும். [7] கருவிநூல்
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia