சூரத் அறிவியல் மையம்
சூரத் அறிவியல் மையம் (Science Centre, Surat) இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள சூரத் நகரத்தில் அமைந்துள்ளது. மேற்கிந்தியாவில் இத்தகைய பல வசதி கொண்ட முதலாவது வளாகம் இதுவாகும். 2009 ஆம் ஆண்டு சூரத் முனிசிபல் ஆணையம் இம்மையத்தைக் கட்டியது.[2] இந்த வளாகத்தில் ஓர் அறிவியல் மையம், அருங்காட்சியகம், ஒரு கலைக்கூடம், ஓர் அரங்கம், ஒரு திறந்தவெளி அரங்கம் மற்றும் ஒரு கோளரங்கம் போன்றவை உள்ளன. அகமதாபாத்தை சேர்ந்த கட்டிடக்கலை நிறுவனமான எச்.சி.பி வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் மேலாண்மை தனியார் நிறுவனம் மூலம் இவ்வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[3] வளாகம்வளாகம் மொத்தம் 21,800 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மற்றும் ₹ 50,24 கோடி செலவில் கட்டப்பட்டது.[2] இதில் 112 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 210 இரு சக்கர வாகனங்களுக்கு நிலத்தடி நிறுத்துமிட வசதி உள்ளது. குளிரூட்டுவதற்காக இங்கு இரண்டு 400 டன் நீராவி உறிஞ்சும் குளிர்விப்பு ஆலைகள் உள்ளன. வளாகத்தில் 1.14 லட்சம் கிலோவாட்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் கூரை சூரிய மின் நிலையமும் உள்ளது.[4] கூடுதலாக, வளாகத்தில் ஒரு உணவகமும் அமைந்துள்ளது.[2] திறக்கப்பட்ட முதல் மூன்று மாதங்களில், அறிவியல் மையம் கிட்டத்தட்ட 30,000 பார்வையாளர்களைக் கொண்டிருந்தது.[5] அறிவியல் மையம்அறிவியல் மையம் வளாகத்தின் முக்கிய பகுதியாகும். இது அறிவியல் கண்காட்சிகளைக் காண்பிக்கும் ஒரு வேடிக்கை அறிவியல் காட்சியகத்தைக் கொண்டுள்ளது. விண்வெளி, நெசவு மற்றும் வைரத்திற்கான பிரத்யேக காட்சியகங்களும் முன்மொழியப்பட்டுள்ளன. சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகத்தில் மரம், பீங்கான், தாமிரம், வெண்கலம், நெசவு, நாணயங்கள், ஓவியங்கள், சின்ன ஓவியங்கள், கையெழுத்துப் பிரதிகள், சிற்பங்கள் போன்ற பல்வேறு வகைகளில் சுமார் 8400 பழங்கால பொருட்கள் உள்ளன. சூரத்தின் கடந்த காலத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. அருங்காட்சியகத்தில் சூரத்தின் வரலாறு குறித்த ஆவணப்படங்களை திரையிட ஒரு சிறிய அரங்கமும் உள்ளது.[6] 2009 ஆம் ஆண்டில் சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகத்திற்கான பொது இடங்கள் பிரிவில் வடிவமைப்பு பிரிவினர் பரிசு வென்றனர். நிறுவனப் பிரிவில் தேசிய விருது பெற்றதற்காக இவர்கள் பாராட்டப்பட்டனர்.[7] திறந்தவெளி அரங்கம்வளாகத்தில் ஒரு திறந்தவெளி அரங்கம் உள்ளது. இது வட்ட வடிவில் படிகள் இருக்கையுடன் உள்ளது. அரங்கில் 250 இருக்கைகள் உள்ளன. கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் சிறிய இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய அரங்கம் பயன்படுத்தப்படுகிறது.[8] கோளரங்கம்முதல் தளத்தில் அமைந்துள்ள கோளரங்கம் 16.30 மீட்டர் விட்டம் கொண்ட கோள வடிவில் கட்டப்பட்டுள்ளது. இது 140 இருக்கைகள் வசதி கொண்டதாகும். கோளரங்கத்தின் எண்முறை அரங்கம் முழு குவிமாடத்தில் காட்டப்படும் நட்சத்திரங்கள், சந்திரன், கிரகங்கள் மற்றும் பிற வானப் பொருட்களை கண்காணிக்க உதவுகிறது. எண்ணிம ஒலி அமைப்புடன் கூடிய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படவீழ்த்திகள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சி தற்போது இந்தி, குசராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் உள்ளது .[9] கலைக்கூடம்சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகத்திற்கு எதிரே அமைந்துள்ள இந்த கலைக்கூடம், நகரின் கலை கண்காட்சிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.[10] அரங்கம்அரங்கம் பிரதான கட்டிடத்தின் தெற்கு முனையில் உள்ள வளாகத்தின் இடைநிலை மட்டத்தில் அமைந்துள்ளது. இது 260 இருக்கை வசதி கொண்டது. கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் கூட்டங்களுக்கு இந்த அரங்கம் பயன்படுத்தப்படுகிறது.[11] இதையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia