சூலு இனக்குழு (Zulu people) தென்னாப்பிரிக்காவில் வாழும் மிகப் பெரிய இனக்குழு ஆகும். தென்னாபிரிக்காவின், குவாசூலு-நேட்டால் மாகாணத்தில் வாழும் இவர்களின் மக்கள்தொகை 10 - 11 மில்லியன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா தவிர, சிம்பாப்வே, சாம்பியா, மொசாம்பிக் ஆகிய நாடுகளிலும் சிறுபான்மையினராக இவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் பேசும் இசிசூலு மொழி ஒரு பான்டு மொழியாகும். குறிப்பாக, இது ங்குனி துணைக்குழுவைச் சேர்ந்தது. சூலு அரசு, 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் தென்னாபிரிக்காவின் வரலாற்றில் முன்னணிப் பங்காற்றியது. இன ஒதுக்கல் கொள்கை நிலவிய காலத்தில், சூலு மக்கள் மூன்றாம்தரக் குடிமக்களாகக் கருதப்பட்டு, வெள்ளையர் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய இனப்பாகுபாட்டினால் அல்லலுற்றனர். விடுதலை பெற்ற தென்னாபிரிக்காவில் இவர்கள் ஏனைய எல்லா இனக்குழுவினருடனும் சம உரிமை பெற்றவர்களாக விளங்குகின்றனர்.
↑International Marketing Council of South Africa (9 July 2003). "South Africa grows to 44.8". www.southafrica.info. Archived from the original on 22 May 2005. Retrieved 4 March 2005.