சூழ்நிலை நகைச்சுவை

ஒரு சூழ்நிலை நகைச்சுவை அல்லது சூழல் நகைப்பு (Sitcom), என்பது நகைச்சுவை நிகழ்ச்சிகளின் ஒரு வகையாகும். இவ்வகை நிகழ்ச்சியில், ஒரு நிலையான கதாபாத்திரம் அல்லது கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டும், கதை நீண்டு அத்தியாயத்திலிருந்து அத்தியாயமாக கொண்டு செல்லப்படும். சுழ்நிலை நகைச்சுவைகள் முதன்முதலில் வானொலியில் தோன்றின, ஆனால் இன்று அது தொலைக்காட்சியில் ஆதிக்கம் செலுத்திவரும் கதை வடிவங்களில் ஒன்றாக காணப்படுகிறது.

ஒரு சூழ்நிலை நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சி, படப்பிடிப்புக்கூடத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் பதிவு செய்யப்படலாம் அல்லது நேரடி பார்வையாளர்கள் இருப்பது போன்ற விளைவை ஒரு சிரிப்பொலி தடத்தை பயன்படுத்துவதன் மூலம் பெறலாம்.

பல சமகால அமெரிக்க சூழ்நிலை நகைச்சுவைகள், ஒற்றை படக்கருவி அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றன. பெரும்பாலும் சிரிப்பொலி தடத்தை கொண்டிப்பதில்லை, இதனால் தற்கால சூழ்நிலை நகைச்சுவை நிகழ்ச்சிகள், பாரம்பரிய சூழ்நிலை நகைச்சுவைகளை காட்டிலும் 1980 மற்றும் 1990களின் நாடக நிகழ்ச்சிகளை ஒத்து காணப்படுகிறது.

வரலாறு

"சூழ்நிலை நகைச்சுவை" என்ற சொல் 1950 களில் பொதுவாகப் பயன்படுத்தப்படவில்லை. வானொலியில் உதாரணங்களாக இருந்தன. முதன்முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட சூழ்நிலை நகைச்சுவையாக "பின்ரைட்ஸ் புரோக்ரஸ்" என்று கூறப்படுகிறது, 1946 மற்றும் 1947 க்கு இடையில் ஐக்கிய இராச்சியத்தில் பிபிசியில் ஒளிபரப்பப்பட்டது[1].

மேற்கோள்கள்

  1. "உலகின் முதல் தொலைக்காட்சி சூழ்நிலை நகைச்சுவை". Comedy.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya