செக்கோசிலோவாக்கியா
செக்கோசிலோவாக்கியா அல்லது செக்கோ-சிலோவாக்கியா[1] (Czech and Slovak: Československo, Česko-Slovensko[2]) என்பது முன்னாள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகும். ஆஸ்திரியா-அங்கேரி இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்று 1918 முதல் இறைமையுள்ள நாடாக இருந்துவந்தது. 1939 முதல் 1945 வரை நாட்சி ஜெர்மனியால் அதிகாரம் செலுத்தப்பட்டு ஒரு நாடு என்ற மதிப்பையிழந்திருந்தது. 1945ல் இதன் கிழக்குப் பகுதியை சோவியத் ஒன்றியம் கைப்பற்றிக் கொண்டது. 1993 சனவரி 1ல் செக் குடியரசு மற்றும் சிலோவாக்கியா என்ற இரண்டு தனி நாடாகப் பிரிந்தது. அண்டை நாடுகள்
![]() ![]() இனப் பிரிவுகள்
சமயம்![]() 1991ம் ஆண்டின் படி, கத்தோலிக்க திருச்சபை 46.4%, லூதரனியம் 5.3%, இறைமறுப்பு 29.5%, கணக்கில்லாதவர்கள் 16.7% என இருந்தனர். விளையாட்டுகள்செக்கோசிலோவாக்கியா தேசிய கால்பந்து அணி என்ற அணியின் மூலமாக எட்டு முறை உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் கலந்துகொண்டு, 1934 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் இரண்டாமிடம் பெற்றது. இவ்வணி 1980ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. செக்கோசிலோவாக்கியா தேசிய பனி வளைதடிப் பந்தாட்ட அணி மூலமாக ஒலிம்பிக்கில் வளைதடிப் பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. எமில் ஜடொபக் என்பவர் ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்களில் நான்குமுறை தங்கம் வென்றுள்ளார். பிரபலமான டென்னிசு வீரர்களான மார்டினா ஹிங்கிஸ் மார்ட்டினா நவரோத்திலோவா மற்றும் இவான் லென்டி, மிலோசவ் மிகிர் போன்றவர்கள் செக்கோசிலோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர்கள் மேற்கோள்கள்மூலம்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia