செக்சோ ஓ பால்சாஃபே (திரைப்படம்)
செக்சோ ஓ பால்சாஃபே எனும் பிரஞ்சு-ஈரானிய-தஜிக் திரைப்படம் செக்ஸ் & பிலாஸபி (Sex & Philosophy) எனும் ஆங்கிலப் பெயரில் வெளிவந்தது. இந்த பிரஞ்சு-ஈரானிய-தஜிக் (French-Iranian-Tajik ) திரைப்படம் 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை ஈரானிய இயக்குநர் மோசன் மக்மால்பஃப் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் தஜிகிஸ்தான் நாட்டில் படம் பிடிக்கப்பட்டது.[1] திரைப்படத்தைப் பற்றிஇத்திரைப்படம் மாண்ட்ரீல் திரைப்பட விழாவில் 2005 ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. தென் கொரியா, சிங்கப்பூர், துருக்கி, இத்தாலி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டது. தஜிகிஸ்தான் அரசால் 78 வது அகெடமி விருதுக்காக இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்புச் சொற்கள் (English subtitles) இணைக்கப்படாததால் இத்திரைப்படம் அனுமதிக்கப்படவில்லை.[2] கதை40 வயது நடன ஆசிரியர் தனது நான்கு காதலிகளையும் ஒரே இடத்திற்கு ஒரே நேரத்தில் வரச் சொல்லி அவரது நிலையை விளக்குகிறார். தனது செயல்பாடுகள், அவர்களை முதன் முதலில் எதனால் காதலித்தார் என விளக்குகிறார். பின்னர் அவரது நான்கு காதலிகளுள் ஒருவர் நடன ஆசிரியரைத் தவிர வேறு மூன்று பேரைக் காதலித்திருக்கிறார். அவரும் அவரது காதலர்களை அழைத்து எதனால் முதலில் அவர்களைக் காதலித்தார் என தனது நிலையை விளக்குகிறார். நடிகர்கள்
விருதுகள்
வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia