செங்குருகு
செங்குருகு (Cinnamon Bittern-இக்சோபிரைகசு சின்னமோமேயசு) தொல்லுலக குருகு வகையைச் சார்ந்த ஒரு சிறிய பறவை ஆகும். சீனா, இந்தியா, இந்தோனேசியா, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் பரவியுள்ளது. பொதுவில் ஓரிடப் பறவையான செங்குருகு, சில பகுதிகளில் சிறிய தொலைவு பறந்து சென்றும் இனப்பெருக்கம் செய்யவல்லது. இதன் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழல்பகுதிகள் வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்பமண்டலம் ஆகியவை ஆகும். தோற்ற அமைப்புகுட்டையான கழுத்தும் நீண்ட அலகும் கொண்டது; 38 செமீ நீளம், 90 கிராமிலிருந்து 165 கிராம் எடை கொண்டு மடையானை விட சிறியதாவும் மெல்லியதாகவும் இருக்கும். ஆண் பறவை: பெரும்பாலும் செம்மண் நிறமுடையது; மார்பின் மேல் பகுதி கருப்பாக இருக்கும். பெண் பறவை: பின் பகுதி புள்ளிகளுடன் மார்புப் பகுதி செம்பழுப்பு கோடுகள் கொண்டது பரம்பலும் வாழிடமும்![]() இந்த சிற்றினம் ஆசியா முழுவதும் மிகப் பெரிய வரம்பைக் கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து இந்தோனேசியா வரை இவை காணப்படுகின்றன. இவை மைக்குரோனீசியா, சீசெல்சு மற்றும் ஆப்கானித்தான் உள்ளிட்டப் பிற இடங்களிலும் உள்ளன. உலகளாவிய இதன் எண்ணிக்கை குறித்த நிச்சயமற்றவை மதிப்பீடுகளின்படி 130,000 முதல் 2,000,000 வரை காணப்படலாம்.[1] உணவுஇதன் உணவு வகைகள் நீரில் வாழும் பூச்சி, புழுக்கள் போன்றவையாகும்.[2] மேற்கோள்கள்
மேலும் பார்க்க
|
Portal di Ensiklopedia Dunia