செஞ்சேனை

செஞ்சேனையின் சின்னம்

செஞ்சேனை (Red Army) எனப் பரவலாக அறியப்படும் ரஷ்ய உழவுத் தொழிலாளர் செஞ்சேனை என்ற போல்ஷெவிக்குகளால் உருவாக்கப்பட்ட ஆயுதபடை. இப்படை 1918 மற்றும் 1922 ஏற்பட்ட ரஷ்ய புரட்சிக்காரர்களுக்காக உள் நாட்டுப் போரில் பங்கு பெற்றது. இந்தப் படைப் பிரிவினரே பின்னாளில் சோவியத் ஒன்றியத்தின் படையாக ஆக்கப்பட்டது.

பெயர்க் கராணம்

சிவப்பு என்பது தொழிலாளர் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் இரத்தத்தைக் குறிக்கும் சொல் இது முதலாளித்துவத்தை எதிர்த்து சமத்துவத்தை நிலைநாட்டுபவர் என்ற பொருளைத் தரும் இடு பெயராகும். இதன் இடுபெயர் சிவப்பு பெப்ரவரி 25 1946- ல் கைவிடப்பட்டு அரசின் நிர்வாக ரீதியிலான பெயராக சோவியத் படை என்று மாற்றப்பட்டது. இப்படை பின்னாளில் சோவியத்தின் தரைப்படைப் பிரிவாக மாற்றப்பட்டது. இந்தப் படைப்பிரிவு நாளடைவில் மிகப்பெரிய இராணுவ அமைப்பாக சோவியத் ஒன்றியம் சிதறும் வரை (1991) வரை விரிவடைந்தது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya