செந்தமிழ் நிலம்

செந்தமிழ் நிலம் என்பது இயற்சொல் வழங்கும் நிலப்பகுதி ஆகும். இந்த நிலப்பகுதியின் எல்லையைக் குறிப்பிடுவதில் பழங்கால இலக்கண உரையாசிரியர்களின் கருத்தில் மாறுபாடுகள் உள்ளன.

இளம்பூரணர் கருத்து
செந்தமிழ் நிலம் என்பது வையை யாற்றின் வடக்கு, மருத யாற்றின் [1] தெற்கு, கருவூரின் மேற்கு, மருவூரின் [2] மேற்கு.
நன்னூல் உரையாசிரியர் சங்கர நமச்சிவாயர் கருத்து
செந்தமிழ் நிலம் என்பது பாண்டுநாட்டுப் பகுதி. [3])
நன்னூல் உரையாசிரியர் சிவஞான முனிவர் கருத்து
தென்பாண்டி நாடு சேர்க்கப்படாத பாண்டி நாடுதான் செந்தமிழ் நிலம். [4]
நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் கருத்து
இவர் இளம்பூரணர் கருத்தை வழிமொழிகிறார்.

அடிக்குறிப்பு

  1. மருதயாறு என்பது பெரம்பலூர் மாவட்டத்தில் ஓடும் ஆறு
  2. மருவூர் என்பது திருவையாற்றுக்கு மேற்குள்ள ஓர் ஊர்
  3. செந்தமிழ் நிலமாவது யாது எனின்,
    சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும்
    சுந்தர பாண்டியன் எனும் தமிழ் நாடனும்
    சங்கப் புலவரும் தழைத்து இனிது இருக்கும்
    மங்கலப் பாண்டி வளநாடு என்ப (நன்னூல் நூற்பா 271 உரை
  4. செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் தென்திசைக்கண்ணதாய தென்பாண்டி நாட்டார் ஆவினைப் பெற்றம் என்றும், சோற்றைச் சொன்றி என்றும், ... வழங்குவர். (நன்னூல் விருத்தியுரை நூற்பா 273)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya