செனான் ஆக்சியிருபுளோரைடு
செனான் ஆக்சியிருபுளோரைடு (Xenon oxydifluoride) என்பது XeOF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செனான் டெட்ராபுளோரைடு சேர்மத்தை பகுதியளவு நீராற்பகுப்பு செய்யும் தயாரிப்பு முறையில் இது உருவாக்கப்படுகிறது. முன்னர் ஆய்வு செய்யப்பட்ட இப்பாதை 2007 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் அன்று முதலில் ஓர் உறுதியான தனிமைப்படுத்தல் முறையாக வெளியிடப்பட்டது.[1]
செனான் ஆக்சியிருபுளோரைடு T-வடிவ வடிவவியலைக் கொண்டுள்ளது. பலபடிகளை உருவாக்காது, இருப்பினும் இது அசிட்டோநைட்ரைல் மற்றும் ஐதரசன் புளோரைடுடன் ஒரு கூட்டு விளைபொருளை உருவாக்குகிறது.[1] குறைந்த வெப்பநிலையில் நிலைப்புத்தன்மையுடன் இருந்தாலும், சூடுபடுத்தப்படும்போது ஆக்சிசன் அணுவை இழப்பதன் மூலமோ அல்லது செனான் இருபுளோரைடு மற்றும் செனான் ஈராக்சியிருபுளோரைடுக்கு விகிதாசாரம் செய்வதன் மூலமோ விரைவாக சிதைவடைகிறது.:[1]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia