செமினியு

செமினியு
மாவட்டத் தலைமையிடம் & பேரூராட்சி
செமினியு is located in நாகாலாந்து
செமினியு
செமினியு
வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் செமினியு கிராமத்தின் அமைவிடம்
செமினியு is located in இந்தியா
செமினியு
செமினியு
செமினியு (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°55′29″N 94°12′54″E / 25.92469°N 94.21488°E / 25.92469; 94.21488
நாடுஇந்தியா
மாநிலம்நாகாலாந்து
மாவட்டம்செமினியு மாவட்டம்
பேரூராட்சிசெமினியு பேரூராட்சி மன்றம்
ஏற்றம்
1,261 m (4,137 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,863
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
797109
இணையதளம்https://tseminyu.nic.in/

செமினியு (Tseminy), வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள செமினியு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் பேரூராட்சியும் ஆகும்.[1] இந்நகரம் மாநிலத் தலைநகரான கோகிமாவிற்கு வடகிழக்கே 47.8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிழக்கு இமயமலைத் தொடரில் அமைந்த இந்த ஊர் கடல்மட்டத்திலிருந்து 1261 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்நகரம் வழியாக தேசிய நெடுஞ்சாலை 2 செல்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 602 குடியிருப்புகள் கொண்ட செமினியு பேரூராட்சியின் மக்கள் தொகை 2863 ஆகும். அதில் 1398 ஆண்கள் மற்றும் 1465 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 2,824 உள்ளனர். மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 18.69% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1048 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.40% ஆக உள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. Pauthang Haokip (2011). Socio-linguistic Situation in North-East India. Concept. p. 23. ISBN 978-81-8069-760-9.
  2. "Tseminyu Vill. Village Population - Tseminyu - Kohima, Nagaland". www.census2011.co.in. Retrieved 2025-04-27.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya