செம்மான்
செம்மான் (Semman) என்பவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் ஆதிதிராவிடர் பட்டியலின் கீழ் இடம் பெற்றுள்ள சாதிகளுள் ஒன்றாகும். இவர்கள் பறையர் சமூகத்தின் ஒரு பிரிவினராவர்.[1][2][3] இவர்கள் முதலில் செம்மார் என்றும் கூறுவர்.இருபதாம் நூற்றாண்டின் மையக் காலம்வரை கிராமங்களின் மொத்தக் கண்காணிப்பில் வாழ்ந்தார்கள். இவர்கள் ஊரிலிருப்பவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்து கொடுத்து, ஊரில் ஒவ்வோர் ஆண்டும் பேசி முடிவு செய்த ஆண்டுக் கூலியைப் பெற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். செம்மன் என்ற தமிழ்ச் சொல்லுக்கு தோல் தொழிலாளி என்று பொருள். எனவே இந்த சாதி அதன் பாரம்பரியத் தொழிலான தோல் வேலையிலிருந்து அதன் பெயரைப் பெற்றது என்று ஊகிக்கப்படுகிறது. ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டனின் "Castes and Tribes of South India" என்னும் நூலை கரந்தையா பிள்ளை "தென்னிந்திய குலங்களும் குடிகளும்" என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். இதில் செம்மான்கள் பற்றி அவர் குறிப்பிடுவது "இவர்கள் தோல் தொழில் செய்யும் தமிழ் வகுப்பார், 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் அருணகிரிநாதர அவர் எழுதிய "கந்தர் அனுபூதி" என்னும் நூலில் இந்த செம்மான் குடியினர் பற்றி குறிப்பிட்டு பாடியுள்ளார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia