செயங்கொண்டார்

செயங்கொண்டார் என்னும் புலவர் பிற்கால சோழர் கால இலக்கியமான கலிங்கத்துப்பரணியைப் பாடியவர். முதலாம் குலோத்துங்க சோழனுடைய (அரசாண்டு: கி.பி. 1070–1120)[1] அரசவையில் பணி புரிந்த புகழ்பெற்ற புலவரும் ஆவார். இவர் “வித்தைய் விதம்பன சங்கவி” என்ற பட்டத்துடன் பாராட்டப்பட்டார்[2]. சில இலக்கியக் குறிப்புகள் அவரை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தீபங்குடியைச் சார்ந்த அருகர் எனக் கூறுகின்றன. இந்நூலின் காப்புச் செய்யுளால் இவர் சைவர் என அறியலாம். பரணி என்பது தமிழிலக்கியப் பாங்குகளில் ஒன்று. பெரும் போரில் ஆயிரம் யானைகளை வென்ற வீரரைப் பாராட்டும் நூல்பாங்காக இது காணப்படுகிறது[3]. செயங்கொண்டார் இதை முதன்முதலாக தமிழில் முழுமையாக இயற்றியவராக அறியப்படுகிறார். இவரைத் தமிழில் வரலாற்று உண்மைகளை இலக்கியச் சிறப்போடு தொகுத்துக் கூறிய முதல் வரலாற்றுப் புலவராக சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

கலிங்கத்துப்பரணி, யமனின் பரணி நட்சத்திரத்தின் இயல்புகளோடு ஒத்த அமைப்பில், தீச்செயல் சார்ந்த நாயகர்களையும், அறநெறி வழியான வெற்றியையும் இலக்கிய நயத்துடன் செம்மையாக விவரிக்கிறது[4]. புலவரான பலபட்டடைச் சொக்கநாதர் "பரணிக்கோர் செயங்கொண்டார்" என்று சிறப்பித்துப் பாடியுள்ளார்[5]. சமகாலத்தவராகக் கருதப்படும் ஒட்டக்கூத்தரும் "தெந்தமிழ்த்தெய்வப் பரணி" என்று இவர் பாடிய பரணியைச் சிறப்பித்துள்ளார்[6].

புகார் நகர வணிகப் பெருமக்களைச் புகழ்ந்து இசை ஆயிரம் என்ற நூலையும் பாடியுள்ளார். அத்துடன் விழுப்பரையர் மீது உலாமடல் என்னும் நூலையும் இயற்றியதாகக் குறிப்பிடப்படுகிறது.[7] எனினும், இந்நூல்கள் அவரால் இயற்றப்பட்டதா என்ற தொடர்பாக அறிஞர்களிடையே பன்முகக் கருத்துகள் உள்ளன.

சான்றுகள்

  1. ‘‘The Cōḷas, K. A. Nilakanta Sastri, 1935’’. pp. 338.
  2. ‘‘கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி, ந. சுப்பு ரெட்டியார், 1957’’. பக். 141–145.
  3. அநு., பக். 11
  4. அநு., பக். 14
  5. ‘‘இராதாமங்கலம் - ஆலங்குடி. அ.கோபாலையனார், கவிச்சக்கரவத்தி சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி, 1938’’. பக். 1.
  6. அநு., பக். 1
  7. "கலிங்கத்துப் பரணி". www.tamilvu.org. Retrieved 2019-11-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya