செயலி நிரலாக்க இடைமுகம்
செயலி நிரலாக்க இடைமுகம் அல்லது பயன்பாட்டு நிரல்படுத்தல் இடைமுகம் (application programming interface - API ) என்பது ஒரு மென்பொருள் மற்றொரு மென்பொருளுடன் தொடர்பு கொள்வதற்காக நிறுவப்படும் ஓர் இடைமுகமாகும். எளிமையாக கூறுவதானால், இது மனிதர்களுக்கும், கணினிகளுக்கும் இடையில் தொடர்பு கொள்ள உதவும் ஒரு பயனர் இடைமுகத்தைப் போன்றது. API ஆனது பயன்பாடுகளாலும், நூலகங்களாலும் (libraries) மற்றும் இயங்குதளங்களாலும் நிறுவப்படுகின்றன. இது வாடிக்கையாளரும், API-ன் நிறுவுனரும் தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தும் வழக்கமான செயல்முறைகள், தரவு அமைப்புகள், ஆப்ஜெக்ட் பிரிவுகள் மற்றும் நெறிமுறைகளுக்கான தொழில்நுட்பக்குறிப்புகளை உள்ளடக்கி இருக்கும்.[1][2][3] கொள்கைஓர் API ஆனது ஒரு மென்பொருள் அமைப்பின் உட்கூறுகளால் (components of software system) பயன்படுத்தப்படும் பல செயல்முறைகளுடன் (set of functions) தொடர்புகொள்வதற்கான ஓர் இடைமுகத்தை வரையறுக்கிறது. ஓர் API-யினால் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை அளிக்கும் மென்பொருளானது, ஏபிஐ-ன் நிறுவுதல் (implementation) என்று கூறப்படும். ஒரு API இவ்வாறு இருக்கலாம்:
எடுத்துக்காட்டாக, பயனர்களுக்கு உள்ளூர் உணவகங்களைப் பார்வையிட அனுமதிக்கும் ஒரு வலைத்தளமானது, கூகுள் நிலவரைப்படங்களில் இருந்து எடுக்கப்பட்ட வரைபடங்களைப் பயன்படுத்தக்கூடும். ஏனென்றால் கூகுள் மேப்ஸ் கொண்டிருக்கும் API, அதை அனுமதிக்கிறது. இருப்பினும், அதில் போதிய கட்டுப்பாடுகளையும் அது அதற்குள்ளாகவே கொண்டிருக்கிறது. "API" என்பது ஒரு நிறுவனத்தால் அளிக்கப்பட்ட ஒரு முழு இடைமுகத்தையோ, ஒரு தனிப்பட்ட செயல்பாட்டையோ, அல்லது பல்வேறு API-களின் ஒரு தொகுப்பையோ கூட குறிப்பதற்கு பயன்படுத்தப்படக்கூடும். இவ்வாறு, அர்த்தப்படுத்தப்படும் விதம் பொதுவாக தகவல் பரிமாற்றம் செய்யும் அந்த நபரால் அல்லது ஆவணத்தால் தீர்மானிக்கப்படுகிறது. சில விளக்கங்கள்யூனிக்ஸ் சிஸ்டங்களில் C மொழிக்கான ஜாவா மொழி API ஆனது ஆப்ஜெக்ட் சார்ந்த மொழிகளில், ஏபிஐ தொடர்ந்து library வடிவத்தில் வினியோகிக்கப்படுகிறது. ஆவணமுறை பொதுவாக சில எளிய உதவி பக்கங்களின் வடிவத்தில் அளிக்கப்படுவதில்லை. ஆனால் பெரும்பாலும் ஆவணங்கள் ஓர் உயர்தரமான மற்றும் சிக்கலான தொகுப்பாகவே வழங்கப்படுகின்றன. JAVA மொழி library ஓர் API தொகுப்பை உள்ளடக்கி இருக்கும். இந்த தொகுப்பு புதிய JAVA நிரல்களை உருவாக்க அபிவிருத்தியாளர்களால் (developers) பயன்படுத்தப்பட்ட JDK வடிவத்தில் அளிக்கப்பட்டிருக்கும். இந்த JDK ஆனது, Javadoc குறிப்புரையில் API-ன் ஆவணமுறையை உள்ளடக்கி இருக்கும். தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஏபிஐ-களின் பயன்ஒரு குறிப்பிட்ட குழுவுடன் பயன்பாட்டு தரவுகளையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு கட்டற்ற கட்டமைப்பை உருவாக்க API-கள் உதவுகின்றன. இந்த வகையில், ஓரிடத்தில் உருவாக்கப்பட்ட கருத்தை மாற்றிமாற்றி பதிப்பிக்க முடியும். அத்தோடு இணையத்தில் பல இடங்களில் இருந்து அவற்றை இற்றைப்படுத்தவும் முடியும். 1. ஃப்ளிக்கர் (flickr) மற்றும் போட்டோபக்கெட் போன்ற தளங்களில் இருந்து புகைப்படங்களை ஃபேஸ்புக் மற்றும் மைஸ்பேஸ் போன்ற சமூக வலையமைப்பு தளங்களில் பகிர்ந்து கொள்ள முடியும். 2. தரவுகளை உள்ளடக்கி அளிக்க முடியும். 3. தரவுகளை மாற்றிமாற்றி பிரசுரிக்க முடியும். எடுத்துக்காட்டாக, இட்வீட்டரால் (Twitter) அளிக்கப்பட்ட பதிலிடுகைகளை ஃபேஸ்புக் கணக்கிற்கு மாற்றும் வகையில் இட்வீட்டர் மற்றும் ஃபேஸ்புக்கின் API-களில் வசதி இருக்கிறது. 4. வீடியோ தரவுகளை தங்களின் தளங்களில் சேர்க்க முடியும். எடுத்துக்காட்டாக, எவரொருவரும் தமது வலைத்தளத்தில் யூ-டியூப்பின் ஒரு வீடியோ தரவை உள்ளடக்கி கொள்ளலாம். 5. பயனர் தகவல்களை வலை சமூகத்தில் இருந்து வெளிப்புற பயன்பாடுகளோடு பகிர்ந்து கொள்ளலாம். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று தான் ஃபேஸ்புக் பயன்பாட்டு பணித்தளம்.[4]. வெளியீட்டு கொள்கைகள்API வெளியீட்டு கொள்கைகள் பொதுவாக பின்வருவனவற்றை உள்ளடக்கி இருக்கும்:
மொழி இணைப்புகளும், இடைமுக பிறப்பிகளும்ஒன்றுக்கு மேற்பட்ட உயர்-மட்ட நிரல்படுத்தல் மொழியால் (high level programming language) பயன்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் API-கள், பெரும்பாலும் தானாகவே வசதிகளைப் பொருத்தி வைக்கும் வசதிகளைக் கொண்டிருக்கும். இந்த வசதிகள் அவற்றின் மொழியில் மிகவும் இயல்பாக இருக்கும். இதுவே மொழி இணைப்புகள் எனப்படுகின்றன. தொகுக்கும் போது API-களுடன் மொழிகளை இணைக்கும் இடைமுக உருவாக்கி கருவிகள் (Interface development tools) சிலவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க
குறிப்புதவிகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia