செயல்முறைக் கட்டுப்பாடு![]() ![]() செயல்முறைக் கட்டுப்பாடு (Process Control) என்பது ஒரு பொறியியல் துறையாகும். இது குறிப்பிட்ட செயல்முறையின் வெளீயிட்டை ஒரு விரும்பத்தகுந்த எல்லைக்குள் தொடர்ச்சியாக பராமரிக்க கட்டமைப்புகள்(architechture), இயங்குமுறைகள்(mechanism) மற்றும் நெறிமுறைகள்(algorithm) ஆகியவற்றைப் புரிந்தணர்ந்து கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, ஒரு பொருளின் ஒத்த தயாரிப்புகளுக்காக இரசாயன உலையின் வெப்பநிலை தொடர்ச்சியாக பராமரிக்கப்படுவது செயல்முறைக் கட்டுப்பாடு ஆகும். செயல்முறைக் கட்டுப்பாடு பரவலாக இன்று அனைத்து தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது, இதன் மூலம் தொடர்ந்து இயக்கப்படும் செயல்முறைகளிலிருந்து ஒத்தப் பொருட்களை அதிகளவில் உற்பத்திசெய்யப்படுவது சாத்தியமாகிறது. செயல்முறைக் கட்டுப்பாடானது தன்னியக்கமாக்கலை(automation) ஏதுவாக்குகிறது, இதன் மூலம் ஒரு சிக்கலான செயல்முறையானது, மத்திய கட்டுப்பாட்டு அறையிலுள்ள குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டே இயக்க முடியும். செயல்முறைக் கட்டுபாடானது பின்னுட்டக் கட்டுபாட்டினையோ அல்லது திறந்த நிலையாகவோ செயற்படும். பின்னுட்டக் கட்டுப்பாடானது தொடர்ச்சியாகவோ அல்லது தொடர்ச்சியற்றோ இருக்கலாம். செயல்முறைக் கட்டுப்பாட்டினை பயன்படுத்தும் பல்வேறு செய்முறைகள்
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia