செர்தான் சாகிரி
செர்தான் சாகிரி (Xherdan Shaqiri, பிறப்பு: அக்டோபர் 10, 1991) சுவிட்சர்லாந்தின் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் செருமனியின் புன்டசுலீகா கூட்டிணைவில் பேயர்ன் மியூனிக்கிலும் சுவிசு தேசிய அணியிலும் நடுக்கள ஆட்டக்காரராக ஆடி வருகிறார். பேசலின் முதல் அணியில் நுழைந்ததிலிருந்து பந்துடனும் பந்து இல்லாமலும் இவரது விரைவான ஆட்டம் பரவலான பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.[3] பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் அலுவல் வலைத்தளம் சாகிரி "பந்துடன் எதிர்பாராத முறையில், இரு கால்களிலும் சமமானத் திறனுடன, கோல் பெட்டிக்கு முன்பாக தொழில்திறனுடன், முன்னோக்குச் சிந்தனையுடன் விளையாடுபவராக" குறிப்பிட்டுள்ளது.[4] இவர் செல்லமாக " ஆல்ப்சின் மெஸ்சி " என்றும்[4] and "மந்திரக் குள்ளர்" என்றும் அழைக்கப்படுகிறார்.[5] இளமைக் காலம்சாகிரி யுகோசுலாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசில் இஞ்சிலானே என்ற இடத்தில் பிறந்தார்.[4] 1992இல் இவர் தனது பெற்றோருடனும் மூன்று உடன்பிறப்புகளுடனும் சுவிட்சர்லாந்திற்கு புலன்பெயர்ந்தார்.[6] இவருக்கு இரட்டைக் குடியுரிமையாக சுவிட்சர்லாந்து மற்றும் அல்பேனியக் குடியுரிமை உள்ளது.[7] இயற்கையான குடிவழங்கல் சட்டப்படி சுவிட்சர்லாந்து குடிமகனாக இவர் ஆனார். மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia