செலுத்து வாகனம்![]() ஏவூர்தி (Launch vehicle) அல்லது செலுத்து வாகனம் என்பது செயற்கைக்கோள்களை [புவி|[பூமி]]யிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும். இவ்வாறு எடுத்துச் செல்லும் செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் புவியின் வட்டப்பாதையில் நிறுத்தப்படுகின்றன. இத்தகைய ஏவூர்திகள் அதற்கென வடிவமைக்கப்பட்ட ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படுகின்றன. ஏவுதளத்தில் ஏவூர்திக்கென சிறப்புக் கட்டுமாகஏர்பாடு செய்யப்பட்டிருக்கும்.[1] இந்த ஏவூர்தி பெரும்பாலும் இரண்டு நிலைகளைக் கொண்டதாக இருக்கும். சிலநேரங்களில் நான்கு நிலைகளைக் கொண்டதாகவும் இருக்கும். பெரும்பாலான ஏவூர்திகள் ஒரு முறை பயன்படுத்துபவையாக இருக்கும். ஏனெனில் செயற்கைக்கோள்களை அதன் வட்டப்பாதையில் உந்தித் தள்ளியபின் கீழே பூமியை நோக்கி விழும் ஏவூர்தி புவியின் வளிமண்டலத்துடனான உராய்வினால் அதன் பாகங்கள் எரிந்துவிழும். ஆனால் மறுமுறையும் பயன்படுத்தும் வகையிலான ஏவூர்திகளும் வடிவமைக்கப்படுகின்றன. சில ஏவூர்திகளில் மிகைஉந்திகளும் (Boosters) இணைக்கப்பட்டிருக்கும். வகைகள்ஏவுதள அமைவிடம்ஏவுதள அமைவிடத்தைப் பொறுத்து இத்தகைய கஏவூர்திளை மூன்றாக வகைப்படுத்தலாம்.
உருவத்தைப் பொறுத்து![]() ஏவூர்தி உருவத்தைப் பொறுத்தும் வகைப்படுத்தலாம்.
விதிகள்சர்வதேச விதிகளின் படி செலுத்து வாகனத்தின் உரிமையாளரான நாடு, இச்செலுத்து வாகனத்தால் ஏற்படும் எல்லாவித விபத்துகளுக்குப் பெறுப்பேற்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia