செல்வ மகள்
செல்வ மகள் 1967 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராஜஸ்ரீ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள்[1][2] திரைக்கதைபல திருட்டுக்குற்றங்களை அடுத்து பலராமன் (மேஜர் சுந்தரராஜன்) தன் மனைவி பார்வதியையும் (பண்டரிபாய்) மகனையும் பிரிந்து நாட்டை விட்டு ஓடிப்போகிறான். சந்தர்ப்பவசத்தால் தாயும் மகனும் பிரிகின்றனர். இளம் பையனைக் கண்ட ஒரு நல்லவர் அவனுக்கு சேகர் (ஜெய்சங்கர்) எனப் பெயரிட்டு, வளர்த்து ஆளாக்குகிறார். அவனும் நன்றாகக் கல்வி கற்று முன்னேறுகிறான். சேகர், சாரதா (ராஜஸ்ரீ) என்ற பெண்ணைக் காதலிக்கிறான். சாரதா ஒரு பணக்கார பேங்கரான ரங்கநாதன் (வி. எஸ். ராகவன்) என்பவரின் ஒரே மகள். இந்த நிலையில் பலராமன் நாட்டுக்குத் திரும்பி வந்து பாலசுந்தரம் என்று பெயரை மாற்றிக் கொள்கிறான். தன் இன்னொரு மனைவியின் மகனான மோகன் (ஸ்ரீகாந்த்) என்பவனுடன் சேர்ந்து ஒரு நேர்மையற்ற வியாபாரத்தைத் தொடங்குகிறான். ரங்கநாதனைக் குறி வைக்கிறான். அதே சமயம் மோகன் சாரதா மேல் கண் வைக்கிறான். ஏமாற்றுகளும் தந்திரங்களும் தொடருகின்றன. முடிவில் கடந்த கால உண்மைகள் எவ்வாறு வெளியாகின்றன என்பதே மீதிக் கதையாகும். நடிகர்கள்
பாடல்கள்
இத் திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். பாடல்களை கண்ணதாசன், வாலி ஆகியோர் எழுதினர். பின்னணி பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia