செவ்வந்திப் புராணம்செவ்வந்தி புராணம் என்பது புராண நூற்றாண்டு எனக் கொள்ளத்தக்க 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். 550 பாடல்களை 14 சருக்கங்களில் கொண்டு விளங்கும் நூல். இது சிராமலை பற்றிய புராணம். இந்த நூலின் பெயர் ஊரின் பெயரால் அமையாமல் ஊருக்குப் பெருமை சேர்த்த செவ்வந்தி என்னும் பூவின் பெயரால் அமந்திருப்பது ஒரு புதுமை. புராணக் கதைசங்க காலத்தில் உறையூர் சிறப்புடைய நகரமாகத் திகழ்ந்த்து. தேவார காலத்தில் உறையூரின் சிறப்பு குன்றி எல்லாச் சிறப்புக்களும் சிராமலையை மையமாகக் கொண்டிருந்தன. உறையூர் மண்மாரியால் அழிந்த பின்னர் இந்த நிலைமை. உறையூரைச் சூர-ஆதித்த-சோழன் என்பவன் ஆண்டுவந்தான். சூர-ஆதித்த-சோழனுக்கு 49 தலைமுறைக்குப் பின்னர் வந்து நாடாண்டவன் பராந்தகச் சோழன்|பராந்தகன். இந்தப் பராந்தகனும் அரசியும் முனிவரின் நந்தவனத்துச் செவ்வந்தி மலர்களைக் கொண்டுவரச் செய்து சூடிக்கொண்டனர். முனிவர் இது தகாது என அரசனிடம் எடுத்துரைத்தார். [1] அரசன் கேட்கவில்லை. முனிவர் சபித்தார். உறையூரில் மண்மாரி பொழிந்து ஊர் அழிந்தது. அரசன் அழிந்தான்.
கருவுற்றிருந்த அரசி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள். பின்னர் தப்பிப் பிழைத்தாள். அவளுக்குப் பிறந்த குழந்தையே கரிகாலன். பட்டத்து யானை இவனுக்கு மாலையிட்டு அரசனாக வகை செய்தது. குழந்தையை யானை தூக்கிச் சென்றபோது அரசி தாய் அவனது குதிக்காலில் கரிக்கோடிட்டு அனுப்பி வைத்தாள். அதனால் இவன் பெயர் கரிகாலன் என்பதாயிற்று. [2] கருவுற்றிருந்த ஒரு தாய்க்குச் சிராமலைச் சிவபெருமான் பிள்ளைப்பேறு பார்த்ததால் தாயுமானவர் என்னும் பெயர் பெற்றார் என்பது இப்புராணத்தில் கூறப்படும் மற்றொரு கதை. பாடல் (எடுத்துக்காட்டு) [3]ஓகையால் திரை முன்னாளில் உழக்கும் மாவினையும் வாட்டும் எந்தையர்க்கு அனுதினம் இரும்பு மாமலை கருவிநூல்
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia