செவ்வாய் 2020
செவ்வாய் 2020 (Mars 2020) என்பது ஐக்கிய அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பின் செவ்வாய் புத்தாய்வுத் திட்டத்தின் செவ்வாய் தோரண தொலைநோக்குப் பணியாகும். இத்திட்டத்தில் பெர்சீவியரன்சு என்ற தரையுளவியும், இஞ்சினுவிட்டி உலங்கூர்தி என்ற ஆளற்ற உலங்கூர்தியும் அடங்கும். இந்தத் தரையுளவியானது 2020 சூலை 30 அன்று ஒ.ச.நே 11.50 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.[1] இந்தத் தோரணம் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் நாள் ஒ.ச.நே 20.55 மணியளவில் செவ்வாய் கோளின் ஜெசீரா விண்கல் வீழ் பள்ளத்தின் பகுதியில் தரையிறங்கியது.[2] செவ்வாய் 2020 திட்டத்தின் கீழான பெர்சீவியரன்சு தரையுளவியானது பண்டைய நுண்ணுயிர் வாழ்வின் அறிகுறிகளைத் தேடும், இந்த முயற்சி செவ்வாய் கோளின் கடந்தகால வாழ்விடத்தை ஆராய நாசாவின் தேடலை முன்னேற்றும். செவ்வாய் கோளின் பாறைகள் மற்றும் மண்ணின் முக்கிய மாதிரிகளை சேகரிக்க இந்த தோரணம் ஒரு துரப்பணியைக் கொண்டுள்ளது, பின்னர் அவற்றை எதிர்கால ஆய்வுக்காக முத்திரையிடப்பட்ட குழாய்களில் சேகரித்து வைக்கிறது. இந்த மாதிரிகள் விரிவான பகுப்பாய்விற்காக மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்படும். பெர்சீவரென்சு தோரணம் செவ்வாய் கோளின் எதிர்கால மனித ஆய்வுக்கு வழி வகுக்க உதவும் தொழில்நுட்பங்களையும் சோதிக்கும்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia