செ. மு. மணிகண்டன்

செ. மு. மணிகண்டன் ஓர் தமிழக அரசியல்வாதி. இவரது தந்தை செ.முருகேசன். ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், அவைத்தலைவராகவும் இருந்தவர். தாயார் பெயர் அன்னக்கிளி. மணிகண்டனின் மனைவி வசந்தி ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். இவர்களுக்கு லீலா, லெனிசா ஆகிய இரு மகள்களும், கிளிண்டன் செல்லத்துரை என்ற மகனும் உள்ளார்.[1] 2016 ஆம் ஆண்டு இராமநாதபுரம் தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு,[2] தற்போது தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.[3] இந்நிலையில் 2019 ஆகத்து 7 அன்று அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டார். இதன்பிறகு இவரது துறையானது கூடுதலாக ஆர். பி. உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்

  1. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கைக் குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. Retrieved 29 மே 2016.
  2. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2016" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. Retrieved 2016-06-01.
  3. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
  4. "அமைச்சர் மணிகண்டன்: தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் - காரணம் என்ன?". செய்தி. பிபீசி. 7 ஆகத்து 2019. Retrieved 8 ஆகத்து 2019.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya