சேக்கிழார் பிள்ளைத்தமிழ்சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய சேக்கிழாரைப் பாட்டுடைத்தலைவராகக் கொண்டு பாடப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் திரிசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. நூலின் காலம் 19-ஆம் நூற்றாண்டு ஆகும். சேக்கிழார் பிள்ளைத்தமிழில், முதற்கண் விநாயகக் கடவுள் வணக்கமும் அடுத்தாற்போல் பாயிரம் என்னும் தலைப்பில் குருவணக்கமும், அவை அடக்கமும் அமைந்து இருக்கின்றன. நூலுக்குள் காப்புப் பருவத்தில் பதினோரு பாடல்களும், ஏனைய ஒன்பது பருவங்களில் தனித்தனிப் பத்துப் பாடல்களுடன் நூற்றொரு பாடல்கள் பொருந்தியுள்ளன. ஈற்றுப் பாடல் வாழ்த்துக் கூறி முடிப்பதுபோல் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.[1] மேற்கோள்கள்
உசாத்துணை‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர் -சேக்கிழார் வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia