சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு (Sheikh Zayed Cricket Stadium) ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி நகரில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்காகும். இவ்வரங்கு $23 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2004 மே மாதத்தில் திறக்கப்பட்டது.[1] இவ்வரங்கில் விளையாடப்பட்ட முதலாவது ஆட்டம் இசுக்காட்லாந்து, கென்ய அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல்-தர ஆட்டம் ஆகும். இது 2004 நவம்பரில் கண்டங்களிடைக் கிண்ணத்திற்காக நடத்தப்பட்டது. இவ்வரங்கில் 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணப் போட்டிகளும் இடம்பெற்றன. 20,000 இருக்கைகள் இங்கு உள்ளன.[2] இவ்வரங்கிற்கு அமீரகத்தின் முன்னாள் ஆட்சியாளர் சைகு சாயிது இப்னு சுல்தான் ஆல் நகியானின் நினைவாக "சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு" எனப் பெயரிடப்பட்டது. பன்னாட்டுப் போட்டிகள்2006 ஏப்ரலில் இவ்வரங்கில் இந்தியாவுக்கும், பாக்கித்தானுக்கும் இடையில் தொடர் போட்டிகள் 2005 பாக்கித்தான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேகரிப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. இப்போட்டிகளில் $10 மில்லியன் நிதி சேகரிக்கப்பட்டது. இந்நிதியில் 75% பாக்கித்தானுக்கும், மீதம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்டது.[3] இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia