சைனக் கோயில்![]() சைனக் கோயில் (குஜராத்தி: દેરાસર) அல்லது பசதி (கன்னடம்: ಬಸದಿ) என்பது சைன சமயத்தைப் பின்பற்றுபவர்களான சைனர்களுக்கான வழிபாட்டுத் தலமாகும்.[1] சைனக் கட்டடக்கலை என்பது அடிப்படையில் கோயில்கள் மற்றும் மடங்களை மட்டுமே வரையறுப்பதாக உள்ளது. சைனக் கட்டடங்கள் பொதுவாக அவை கட்டப்பட்ட இடம் மற்றும் காலத்தின் பாணியை எதிரொலிக்கின்றன. சைனக் கோவில் கட்டடக்கலை பொதுவாக இந்துக் கோயில் கட்டிடக்கலை மற்றும் பண்டைய காலத்திய பௌத்த கட்டிடக்கலைக்கு நெருக்கமாக உள்ளது. பொதுவாக இந்த அனைத்து சமயத்தினருக்கும் ஒரே கட்டடக் கலைஞர்கள், சிற்பிகளே பணிபுரிந்துஏஏனர். மேலும் பிராந்திய மற்றும் காலக்கட்ட பாணிகள் பொதுவாக ஒரே மாதிரியானவையாக இருந்தன. 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக, பெரும்பாலான இந்து, சைனக் கோயில்களின் அடிப்படை அமைப்பானது, ஒரு சிறிய கருவறை அல்லது பிரதான மூர்த்தி அல்லது வழிபாட்டு உருவங்களுக்கான சிற்றாலயத்தைக் கொண்டுள்ளது. அதன் மேல் உயரமான மேற்கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு முன்புறமாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய மண்டபங்கள் அமைகப்பட்டுள்ளன. மாரு-குர்ஜரா கட்டிடக்கலை அல்லது "சோலங்கி பாணி" என்பது குசராத்து மற்றும் இராசத்தானில் காணப்படும் ஒரு கோயில் பாணியாகும் (இரு பகுதிகளும் சைன சமயம் வலுவாக இருக்கும் இடங்களாகும்), இது 1000 ஆம் ஆண்டில் இந்து மற்றும் சைனக் கோயில்களில் இருந்து உருவானது. ஆனால் சைன சமயத்தவர்களிடையே மிகுந்த பிரபலமடைந்தது. இது இன்று வரை, ஓரளவு மாற்றமடைந்த வடிவத்தில் பயன்பாட்டில் உள்ளது. உண்மையில் 20 ஆம் நூற்றாண்டில் சில இந்து கோவில்களும் இந்த கட்டடக் கலை பாணியில் கட்டுவது பிரபலமாகி வருகிறது. அபு மலை, தரங்கா, கிர்நார், பாலிதானாவில் உள்ள தில்வாராவில் உள்ள கோயில் குழுக்களில் இந்த பாணி காணப்படுகின்றன.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia