சைவசமயநெறி

சைவசமயநெறி என்னும் நூல் [1] 16 நூற்றாண்டில் வாழ்ந்த தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் என்பவரால் எழுதப்பட்டது. [2]

இது 727 குறள் வெண்பாவால் ஆன சைவ சமயச் சாத்திரப் பெருநூல்.

  • முதல் பகுதியில் ஆசாரியர் இலக்கணம் 117 குறட்பாக்களில் சொல்லப்படுகிறது. நல்ல நதிக்கரையில் பிறத்தல், மனக்குற்றம் நீக்குதல், உடற்குற்றம் இன்மை, தீட்சை பெற்றிருத்தல், வேதம் உணர்ந்திருத்தல் முதலானவை ஆசாரியரது இலக்கணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
  • இரண்டாம் பகுதியில் மாணாக்கர் இலக்கணம் கூறப்படுகிறது. இதில் மாணாக்கர்கள் சமயி, புத்திரகன், சாதகன் என மூன்று வகையினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். பூப் பறித்தல், வில்வம் எடுத்தல், குருவை வழிபடும் முறை முதலானவை இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன.
  • மூன்றாம் பகுதி பொதுவியல். இதில் ஆசாரியரின் நித்திய கருமங்கள் கூறப்பட்டுள்ளன. குளிர்ந்த நீரில் நீராடுதல், ஆன்மார்த்த பூசை, பரமார்த்த பூசை, சிவ-சின்னம் தரித்தல், வணங்கும் முறை, உண்ணும் முறை முதலானவை இப் பகுதியில் கூறப்பட்டுள்ளன. சிவபூசை பற்றிய செய்திகள் இதில் 572 குறட்பாக்களில் சொல்லப்பட்டுள்ளன.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. ஆறுமுக நாவலரின் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.
  2. சைவ சமயநெறி சாற்றினன் சம் பந்தன் உயிர்
    மையறை வாய்க்க வரம். (இந்த நூலின் இறுதி வெண்பா)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya