சொத்தவிளை கடற்கரை

சொத்தவிளை கடற்கரை
நாகர்கோவில் அருகே சொத்தவிளை கடற்கரை
நாகர்கோவில் அருகே சொத்தவிளை கடற்கரை
நாடு இந்தியா
நாடுதமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி

சொத்தவிளை கடற்கரை (Sothavilai Beach) தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். நாகர்கோவிலுக்கு மிக அருகில் இக்கடற்கரை அமைந்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து வருகின்றது. இந்தக் கடற்கரை 4 கி.மீ. நீளத்துக்குப் பரந்துள்ளது.[1] அழகிய நீண்ட மணல் பரப்புடன் காட்சியளிக்கும் இக்கடற்கரையில் சிறு, சிறு குடில்கள் மூலம் தமிழக சுற்றுலாத் துறை அழகுப்படுத்தியுள்ளது. காட்சிக்கோபுரம், அழகிய புல்வெளிகள், சிறுவர் பூங்காக்கள் இக்கடற்கரையின் அருகில் அமைந்துள்ளன.

இது தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றாகும். 2004 சுனாமி காலத்தில் மாவட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.[2]

சான்றுகள்

  1. "கன்னியாகுமரி: வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகம் அறிந்திராத பிரமிப்பூட்டும் சுற்றுலா தலங்கள்". BBC News தமிழ். 2023-06-09. Retrieved 2023-06-10.
  2. "சொத்தவிளை கடற்கரை". Archived from the original on 2018-12-07. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya