சொம்ச்சாய் வொங்சவாட்
சொம்ச்சாய் வொங்சவாட் (Somchai Wongsawat, தாய் மொழி: สมชาย วงศ์สวัสดิ์, பிறப்பு: ஆகஸ்ட் 31, 1947) தாய்லாந்தின் அரசியல்வாதியும் அதன் பிரதமரும் ஆவார். தாய்லாந்து மக்கள் சக்திக் கட்சியின் தலைவராக இருந்தார். சட்டத்துறையில் பட்டதாரியான இவர் அரசறிவியல் துறையில் முதுமாணிப் பட்டமும் பெற்றவர். அரசியலில்2007 இல் தாய்லாந்து மக்கள் சக்திக் கட்சியின் உதவித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட சொம்ச்சாய் 2008 இல் கல்வி அமைச்சராகவும்[1] பின்னர் உதவிப் பிரதமராகவும் தெரிவானார். பிரதமராக இருந்த சமாக் சுந்தரவேஜ் பதவியில் இருந்தபோது தொலைக்காட்சி ஒன்றில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை அடுத்து உயர் நீதிமன்றம் அவரை பிரதமர் பதவியில் இருந்து அகற்றவே, சொம்ச்சாய் செப்டம்பர் 9, 2008 இல் பதில் பிரதமராகத் தெரிவானார். செப்டம்பர் 17, 2008, சொம்ச்சாய் நாட்டின் தேசிய சட்டமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று (298 எதிர் 163) நாட்டின் பிரதமராகத் தெரிவானார்[2].[3][4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia