சோடியம் அசிட்டேட்டு
சோடியம் அசிட்டேட்டு என்பது அசிட்டிக் காடியின் சோடிய உப்பு. பல்வேறு பயன்பாட்டுக்காக இவ் வேதிப்பொருள் மலிவாக (குறைந்த செலவில்) பெரிய அளவில் தொழிலகங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இரண்டு கரிம அணுக்கள் கொண்ட இவ் வேதிப்பொருள் [CH3COO]− என்னும் எதிர்ம மின்மியாகிய (அயனியாகிய) அசிட்டேட்டு, நேர்ம மின்மியாக உள்ள சோடியத்துடன் சேர்ந்து சோடியம் அசிட்டேட்டு ஆகின்றது. பயன்பாடுகள்தொழிலகங்கள்நெசவாலைகளில் கழிவுக் கந்தகக் காடியை நடுமைப் படுத்த (காடித்தன்மையை ஈடுகட்டி நடுமைப்படுத்த) சோடியம் அசிட்டேட்டு பயன்படுகின்றது. செயற்கை இரப்பர் உற்பத்தியில் குளோரோப்பிரீனை உறுதியேற்றும் வல்க்கனாக்கும் செயற்பாட்டை மட்டுப்படுத்த சோடியம் அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகின்றது. தோல் பதனிடும் தொழிலிலும் இது பயன்படுகின்றது உயிர்வேதியியல் பயன்பாடுசோடியம் அசிட்டேட்டு உள்ள கரைசல் உயிர்வேதியியலில் காரக்காடித்தன்மை(pH) விரைந்து மாறாமல் இருக்க ஓர் இடைமமாகப் பயன்படுகின்றது. உயிர்வேதியியலில் காரக்காடித்தன்மையின் அளவு வேதி வினைகளை வெகுவாக மாற்ற வல்லது.
|
Portal di Ensiklopedia Dunia