சோடியம் அசுகார்பேட்டு
சோடியம் அசுகார்பேட்டு (Sodium ascorbate) என்பது C6H7NaO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசுகார்பிக் அமிலத்தினுடைய பல்வேறு கனிம உப்புகளில் இதுவும் ஒன்றாகும். அசுகார்பிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பாகக் கருதப்படும் இது கனிம அசுகார்பேட்டு என்று அழைக்கப்படுகிறது. உயிர்ச்சத்து சி துணை உணவின் வேறு எந்த வடிவத்தையும் விட இது உலகில் அதிகமாக கிடைக்கும் என்று நிரூபிக்கப்படவில்லை.[2] சோடியம் அசுகார்பேட்டு பொதுவாக 1,000 மில்லி கிராம் அசுகார்பிக் அமிலத்திற்கு 131 மில்லி கிராம் சோடியத்தை வழங்குகிறது (1,000 மில்லி கிராம் சோடியம் அசுகார்பேட்டில் 889 மில்லி கிராம் அசுகார்பிக் அமிலமும் 111 மில்லி கிராம் சோடியமும் உள்ளது). ஓர் உணவு சேர்க்கைப் பொருளாக சோடியம் அசுகார்பேட்டின் ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ301 என்று அடையாளப்படுத்தப்படுகிறது. இது ஆக்சிசனேற்ற மற்றும் அமிலத்தன்மை சீராக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம்,[3] அமெரிக்கா,[4] ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உணவு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.[5] சோடியம் அசுகார்பேட்டு பல்வேறு வீரியம் மிக்க உயிரணுக்களில் செல்நச்சு விளைவுகளை உருவாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது, இதில் குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய மெலனோமா செல்கள் அடங்கும்.[6][7] தயாரிப்புதண்ணீரில் அசுகார்பிக் அமிலத்தைக் கரைத்து, அதற்கு சமமான சோடியம் பைகார்பனேட்டை தண்ணீரில் சேர்ப்பதன் மூலம் சோடியம் அசுகார்பேட்டு தயாரிக்கப்படுகிறது. நுரைத்துப் பொங்குதல் நிறுத்தப்பட்ட பிறகு, விளைபொருளுடன் ஐசோபுரோப்பைல் ஆல்ககாலை சேர்ப்பதன் மூலம் சோடியம் அசுகார்பேட்டு வீழ்படிவாகப் பெறப்படுகிறது. மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia