சோடியம் அறுபுளோரோ அலுமினேட்டு (Sodium hexafluoroaluminate) என்பது Na3AlF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
பெடர் கிறிசுட்டியன் அபில்ட்கார்ட்டு (1740-1801) என்பவரால் 1799 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த சேர்மம் வெள்ளை நிறத்தில் திண்மப் பொருளாகும்.[4][5] இயற்கையாகவே கிரையோலைட்டு என்ற கனிமமாகத் தோன்றுகிறது. அலுமினியத்தின் தொழில்துறை உற்பத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சோடியம் அறுபுளோரோ அலுமினேட்டு என்பது அறுபுளோரோ அலுமினேட்டு (AlF63−) அயனியின் சோடியம் (Na+) உப்பாகும்.
தயாரிப்பு
பெரும்பாலான கிரையோலைட்டு பல்வேறு வகையான தொடர்புடைய பாதைகளால் தயாரிக்கப்படுகிறது. அவற்றில் ஒரு வழி சோடியம் அலுமினேட்டும் ஐதரோபுளோ அமிலமும் வினைபுரிவதால் சோடியம் அறுபுளோரோ அலுமினேட்டு உருவாகும் வழியாகும்:[2]
பெரும்பாலும் பாசுப்பேட்டு சுரங்கத்திலிருந்து மீட்டெடுக்கப்படும் அறுபுளோரோ அலுமினிக் அமிலம், அம்மோனியம் அறுபுளோரோஅலுமினேட்டைக் கொடுப்பதற்காக அம்மோனியாவுடன் சேர்த்து நடுநிலைப்படுத்துதல் தொடங்கி இரண்டு-படி செயல்பாட்டில் வினைப்படுவது முன்னோடி செயல்முறையாகும்:
H3AlF6 + 3NH3 → (NH4)3AlF6
(NH4)3AlF6 + 3NaOH → Na3AlF6 + 3NH3 + 3H2O
சோடியம் அறுபுளோரோஅலுமினேட்டின் கனிம வடிவம், கிரையோலைட்டு என்று அழைக்கப்படுகிறது. இது கிரீன்லாந்தின் மேற்கு கடற்கரையில் உள்ள ஐவிக்டட்டில் 1987 ஆம் ஆண்டில் படிவுகளில் குறையும் வரை வெட்டப்பட்டது.
பயன்கள்
பாக்சைட்டு போன்ற அலுமினிய ஆக்சைடுகளின் மின்னாற்பகுப்புக்கான கரைப்பானாக (அல்லது இளக்கி) செயற்கை கிரையோலைட்டின் மேலாதிக்கப் பயன்பாடாகும். அலுமினிய ஆக்சைடுகளை உலோக அலுமினியமாக மாற்றுவதற்கு உலோக அயனிகள் கரைக்கப்பட வேண்டும், இதனால் அவை மின்னாற்பகுப்பு கலத்தில் வழங்கப்படும் எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்கின்றன. அந்த கரைப்பானாக கிரையோலைட்டு மற்றும் சில அலுமினியம் ட்ரைபுளோரைடு கலவை பயன்படுத்தப்படுகிறது. வழக்கமான கரைசல்கள் போலல்லாமல், இது உருகுவதற்கு 1000 °செல்சியசு வெப்பநிலை தேவைப்படுகிறது. பற்களை வெண்மையாக்குதல் மற்றும் கண்ணாடிக்கான ஒளிகாட்டி ஆகியவை மற்ற பயன்பாடுகளில் அடங்கும்.[2]
கட்டமைப்பு
சோடியம் அறுபுளோரோ அலுமினேட்டு பெரோவ்சிகைட்டு கட்டமைப்பை ஏற்றுக் கொள்கிறது. |AlF6(3-) மையங்கள் கிட்டத்தட்ட எண்முகங்களாக தனித்துவம் பெறுகின்றன. ஆறு மற்றும் உருக்குலைந்த 8-ஒருங்கிணைந்த தளங்களை Na+ ஆக்கிரமித்துள்ளது.[7]
பாதுகாப்பு
ஒப்பிடக்கூடிய அலுமினியம் முப்புபுளோரைடுக்கு இணையாக சோடியம் அறுபுளோரோ அலுமினேட்டின் உயிர் கொல்லும் அளவு 600 மி.கி/கி.கி ஆகும். கிரையோலைட்டு தண்ணீரில் சிறிதளவே கரையும்.
தொடர்புடைய சேர்மம்
சியோலைட்டு (Na5Al3F14) மற்றொரு சோடியம் புளோரோ அலுமினேட்டு சேர்மமாகும்.
↑(Staff) (1799). "Norwegische Titanerze und andre neue Fossilien" (in German). Allgemeine Journal der Chemie2: 502. https://babel.hathitrust.org/cgi/pt?id=mdp.39015066692560&view=1up&seq=520."Zugleich theilte er … wie gefrorne Salzlauge schmilzt." (At the same time he also communicated a report on an especially white, spar-like mineral [that had been] brought a few years ago from Greenland to Denmark. According to one of the investigations undertaken regarding it, it consisted of alumina and hydrofluoric acid. A compound of which no similar example has yet occurred in the mineral realm. It has received the name "cryolite" because it melts like frozen brine before the [flame of a] blowpipe.)